Voluntary Provident Fund: ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு EPF நிதி பாதுகாப்பை அளிக்கிறது. இது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. இபிஎஃப் கணக்கில் (EPF Account) பணியாளர்கள் மாதா மாதம் தங்கள் சம்பளத்தில் 12% -ஐ டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனமும் அதே அளவு தொகையை டெபாசிட் செய்கின்றது. இந்த பங்களிப்பில், 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது, 3.67% EPF கணக்கிற்கு செல்கிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டியை பெறுகிறார்கள். தற்போது வைப்புத்தொகைகளுக்கு 8.25% வட்டி வழங்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Voluntary Provident Fund


இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) விரும்பினால், தன்னார்வ வருங்கால வைப்பு நிதியை (VPF) தேர்வு செய்து அதிக பங்களிப்பு செய்யவும் EPFO ​​அனுமதிக்கிறது. கட்டாய பங்களிப்பான 12% -ஐ விட அதிகம் பங்களிக்க விரும்பினால், தனது நிறுவனத்திடம் அது பற்று கூறி பணியாளர்கள் அதை செய்யலாம். அதிகபட்ச VPF பங்களிப்பு, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100% வரை இருக்கலாம். அசல் பங்களிப்பின் அதே வட்டி விகிதம் இதற்கும் அளிக்கப்படும். 


VPF என்றால் என்ன?


- VPF என்பது EPF இன் நீட்டிப்பாக கருதப்படுகின்றது.
- இது ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க உதவுகிறது.
- இபிஎஃப் வைப்புத்தொகையில் (EPF Amount) கிடைக்கும் அதே வட்டி விகிதம் இதற்கு கிடைக்கின்றது.
- வருமானம் ஆண்டுதோறும் மீண்டும் முதலீடு செய்யப்படுவதால், EPF போலவே, VPF பங்களிப்புகளும் கூட்டு வட்டி பலனைப் பெறுகின்றன.
- விபிஎஃப் சந்தாதாரர்கள் (VPF Subscribers) குறைந்தபட்சம் ஐந்தாண்டு காலத்தை முடிப்பதற்கு முன் பணத்தை எடுத்தால், அதற்கு வரி விதிக்கப்படும். 
- பணி ஓய்வு, ராஜினாமா போன்ற சந்தர்ப்பங்களில் EPF போலவே VPF நிதியும் வழங்கப்படுகிறது.
- கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், இபிஎஃப் போலவே நாமினிக்கு தொகை அளிக்கப்படுகின்றது.
- மருத்துவச் செலவுகள், திருமணம், கல்வி அல்லது சொத்து வாங்குதல் போன்ற நிதித் தேவைகளின் போது VPF-இல் பகுதியளவு தொகையை எடுக்க EPFO ​​அனுமதிக்கிறது.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: UPS-இன் கீழ் அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்... கணக்கீடு இதோ


Voluntary Provident Fund: வரி விதிப்பு


முன்னதாக, EPF பங்களிப்புகளில் பெறப்படும் முழு வட்டிக்கும் வரி இல்லாமல் இருந்தது. எனினும், இந்த விதி, பின்னர் மாற்றப்பட்டது. இப்போது ஒரு வருடத்தில் ரூ. 2.5 லட்சம் வரையிலான ஊழியர்களின் பங்களிப்புக்கான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ரூ.2.5 லட்சம் வரம்பு EPF மற்றும் VPF இரண்டையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


30 ஆண்டுகளுக்கு EPF மற்றும் VPF இல் முதலீடு செய்தால் எவ்வளவு சேமிக்க முடியும்?


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவர் EPF மற்றும் VPF இல் ஆண்டுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் (மாதம் ரூ.20,833) முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில், 8.25% வருடாந்திர வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3.3 கோடியைப் பெறுவார். 20 ஆண்டுகளில், அவரது கார்பஸ் ரூ.1.27 கோடியாக இருக்கும்.


அதாவது EPF மற்றும் VPF இல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் நல்ல தொகையை பெற முடியும். பல்வேறு காரணங்களுக்காக பிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை அவ்வப்போது எடுக்காமல் இருந்தால், கோடிகளில் கார்ப்பஸ் பெறுவது சாத்தியமாகும். 


மேலும் படிக்க | CIBIL Score என்றால் என்ன? கடன் கொடுக்கும் முன் வங்கிகள் செக் செய்யும் பிற முக்கிய விஷயங்கள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ