EPFO Update: அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து வருங்கால வைப்பு நிதி கணக்குகளையும் எவ்வாறு இணைப்பது: 


தனியார் பணிகளில் வேலை செய்பவர்கள், அடிக்கடி வேலைகளை மாற்றிக்கொண்டு இருப்பது வழக்கமாகும். ஒருவர் ஒரு புதிய இடத்தில் வேலைக்கு சேரும் போது, ​​பழைய யுஏஎன் (UAN) எண்ணால், புதிய பிஎஃப் கணக்கு தானாக இணைக்கப்படும் என்ற தவறான எண்ணத்தில் பலர் உள்ளனர், ஆனால் இப்படி நடக்காது. வேலை மாறினால், ஊழியர் தானே இபிஎஃப்ஓ (EPFO) ​​இணையதளத்திற்குச் சென்று தனது புதிய PF கணக்கை UAN உடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.


பிஎஃப் கணக்கை இணைக்காததால் ஏற்படும் தீமைகள்


புதிய வேலைக்கு சேரும் ஒரு நபர், தனது புதிய இபிஎஃப் (EPF) கணக்கை பழைய கணக்குடன் இணைக்கவில்லை என்றால், பழைய கணக்கில் இருக்கும் தொகை ஒன்றாக கணக்கில் வராது என நிதி நிபுணர்களின் கூறுகிறார்கள். வரிச் சேமிப்புக் கண்ணோட்டத்தில் இதைச் செய்வது அவசியமாகவும் கருதப்படுகிறது. 5 வருடங்கள் தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்த பிறகு ஒரு ஊழியர் தனது EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது, ​​அதற்கு அவர் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதேசமயம் அதற்கு முன் பணத்தை எடுத்தால், அவர் வரி செலுத்த வேண்டி வரும். 


மேலும் படிக்க | விமானம் ரத்து அல்லது தாமதம் ஆனால்... பயணிகளுக்கு கிடைக்கும் இழப்பீடுகள் விபரம்!


அனைத்து நிறுவனங்களும் வெவ்வேறு டிடிஎஸ் கழிக்கும்


ஒரு ஊழியர் தனது அனைத்து EPF கணக்குகளையும் இணைக்கவில்லை என்றால், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக TDS செலுத்த வேண்டி வரும். உதாரணமாக, ஒருவர் இரண்டு நிறுவனங்களில் தலா 3 ஆண்டுகள் பணிபுரிந்தால், இரு நிறுவனங்களின் கணக்குகளையும் இணைத்த பிறகு, அவரது மொத்த அனுபவம் 6 ஆண்டுகளாகக் கணக்கிடப்படும். அவர் இதைச் செய்யாவிட்டால், அவரது அனுபவம் 3-3 ஆண்டுகள் தனித்தனியாக கணக்கிடப்படும்.


பிஎஃப் கணக்குகளை இணைப்பதற்கான செயல்முறை


- நீங்கள் உங்கள் அனைத்து இபிஎஃப்ஓ ​​கணக்குகளையும் (EPF Account) ஒன்றிணைக்க விரும்பினால், https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற EPFO ​​போர்டல்  ஐ கிளிக் செய்யவும்.


- இதற்குப் பிறகு, Online Services பிரிவில்  'One Member - One EPF Account (Transfer Request)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


- இதைச் செய்த பிறகு, உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நிறுவனத்தின் விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும்.


- இதைச் செய்த பிறகு, Get Details என்பதைக் கிளிக் செய்தவுடன் நிறுவனங்களின் பட்டியல் திறக்கும்.


- நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கில் கிளிக் செய்யவும்.


- இதைச் செய்யும்போது, ​​'Get OTP' என்ற செய்தி வரும். நீங்கள் அதை கிளிக் செய்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இதை எழுதி சமர்ப்பிக்கவும்.


- இந்த செயல்முறை முடிந்தவுடன் உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். இதற்குப் பிறகு, உங்கள் தற்போதைய நிறுவனம் அதை அங்கீகரிக்கும். பின்னர் EPFO ​​உங்கள் பழைய கணக்கை புதிய கணக்கில் இணைக்கும்.


மேலும் படிக்க | ஆதாரை மிஞ்சும் ஆபார்... மாணவர்களுக்கான ஒரே நாடு ஒரே அடையாள அட்டை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ