EPFO | ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறி மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கும் போது, அவர் தனது பழைய பிஎப் கணக்கிலிருந்து பணத்தை புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்ற வேண்டும். இது பிஎப் தொகையை அதே கணக்கில் வைத்திருப்பதோடு, எதிர்காலத்தில் அதைத் திரும்பப் பெறுவதையும் எளிதாக்குகிறது. எனவே, நீங்களும் வேலை மாறியிருந்தால், உங்கள் பழைய பிஎஃப் கணக்கிலிருந்து புதிய கணக்கிற்கு பணத்தை மாற்றவும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது இந்த செயல்முறையை முழுவதுமாக ஆன்லைனில் மாற்றியுள்ளது. இதற்கு, நீங்கள் EPFOஅலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய கணக்கிலிருந்து புதிய கணக்கிற்கு ஆன்லைனில் EPF பணத்தை மாற்ற, கணக்கு வைத்திருப்பவரின் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை UAN போர்ட்டலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். மேலும், அந்த அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் செயலில் இருக்க வேண்டும். இது தவிர, பணியாளரின் வங்கிக் கணக்கு மற்றும் IFSC குறியீடு ஆகியவை UAN உடன் இணைக்கப்பட வேண்டும், மேலும் பணியாளரின் e-KYC யும் முதலாளியால் அங்கீகரிக்கப்பட வேண்டும். 


EPFO கணக்கு ஆன்லைனில் எக்ஸ்சேஞ்ச் செய்யும் வழிமுறை
1. முதலில், EPFO -இன் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
2. உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு உள்நுழையவும்.
3. இப்போது Online Service விருப்பத்திற்குச் சென்று, One Member – One EPF கணக்கு (பரிமாற்றக் கோரிக்கை) என்பதைக் கிளிக் செய்யவும்.
4. இதற்குப் பிறகு, ஏற்கனவே உள்ள பிஎப் கணக்கு தொடர்பான விவரங்களை தனிப்பட்ட விவரங்களுடன் சரிபார்க்கவும்.
5. பிஎஃப் கணக்கு விவரங்களைச் சரிபார்த்த பிறகு, கடைசி பிஎஃப் கணக்கு விவரம் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
6. படிவத்தைச் சரிபார்க்க, previous employer அல்லது current employer தேர்ந்தெடுக்கவும்.
7. UAN உடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTPக்கான ‘Get OTP’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
8. OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இதைச் செய்வதன் மூலம், EPF பரிமாற்றம் பற்றிய தகவல்களையும் முதலாளி பெறுவார்.
9. ஒருங்கிணைந்த போர்ட்டலின் employer interface மூலம் உங்கள் EPF பரிமாற்றக் கோரிக்கையை உங்கள் நிறுவனம் அங்கீகரிக்கும்.


மேலும் படிக்க | EPS Higher Pension: 3.1 லட்சம் PF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி... ஜனவரி 31ம் தேதி வரை வாய்ப்பு


மேலும் படிக்க | PM Jan Dhan Yojana: ஜன் தன் திட்டத்தில் உள்ள மறைமுக நன்மைகளின் பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ