Voter ID Card Photo Change Process: கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அந்தவகையில் இந்த மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் முதல் கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியிலேயே விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் (Lok Sabha) தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இந்த தேர்தலில் வாக்குபதிவு செய்ய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மூலம் தங்களின் வாக்குகளை பதிவிட முடியும். இந்த அட்டை நாட்டின் குடியுரிமையின் அடையாளமாகவும் அறியப்படுகிறது.


மேலும் படிக்க | வங்கி FD மீதான வட்டி விகிதங்கள் 10% என்ற அளவை தொடுமா.. நிபுணர்கள் கூறுவது என்ன!


நமது நாட்டில் ஆதார் அட்டை (Aadhar Card) தவிர, வாக்காளர் அடையாள அட்டையும் (Voter I Card) வைத்திருப்பது அவசியம் ஆகும். இதனுடன், அவ்வபோது வாக்குச் சீட்டையும் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் நீங்கள் உங்களிடம் இருக்கும் வாக்காளர் அட்டையில் போட்டோவை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், இதற்காக எங்கும் அலையத் தேவையில்லை, வீட்டிலேயே அமர்ந்து படி, எளிய முறையை மாற்றிக்கொள்ளலாம். எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தை எப்படி மாற்றுவது | How to Change Photo on Voter ID:
* முதலில் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை போர்ட்டலுக்குச் செல்லவும்.
* இங்கே நீங்கள் வாக்காளர் பட்டியல் என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், அந்த விருப்பத்தை கிளிக் செய்து, அதில் திருத்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
*  இங்கு படிவம் 8 இல் பெயர், புகைப்பட ஐடி போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
* இங்கிருந்து நீங்கள் புகைப்பட விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் கேட்டக்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவும்.
* அதன் பிறகு உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றவும்.


இவற்றை நிரப்பிய பிறகு உங்களின் வாக்காளர் அடையாள அட்டையின் புகைப்படம் மாற்றம் செய்ய முடியும். புகைப்படம் மட்டுமின்றி, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள வீட்டு முகவரி, பெயர் போன்ற தவறுகளையும் நீங்கள் வீட்டில் இருந்த படி திருத்தம் செய்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்களவை தேர்தல் 7 கட்டங்கள் | Lok Sabha Elections 7 phases Dates:
முதல் கட்டம்: ஏப்ரல் 19
இரண்டாவது கட்டம்: ஏப்ரல் 26
மூன்றாவது கட்டம்: மே 7
நான்காவது கட்டம்: மே 13
ஐந்தாவது கட்டம்: மே 20
ஆறாவது கட்டம்: மே 25 
ஏழாவது கட்டம்: ஜூன் 1
தேர்தல் முடிவுகள்: ஜூன் 4


மேலும் படிக்க | EPFO New Rules: மிகப்பெரிய நிவாரணம், இனி வேலை மாறினால் பிஎஃப் பணம் தானாக மாற்றப்படும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ