PF கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான சுலபமான வழிகள்: இதோ முழு செயல்முறை
EPF Withdrawal: பெரும்பாலும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேர்ந்துள்ள நிதியை இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வுக்கு பின்னரே எடுக்கிறார்கள். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னதாகவும் இந்த நிதியை எடுக்கலாம்.
EPF Withdrawal: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு உபயோகமான ஒரு தகவலை இந்த பதிவில் காணலாம். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO நடத்தும் EPF திட்டத்தின் கீழ் பணியாளர்கள் எதிர்காலத்திற்காக பணத்தை டெபாசிட் செய்து பெரிய தொகையை சேர்க்கிறார்கள். இந்த நிதியின் பலன் ஓய்வுக்குப் பிறகு மொத்த தொகையாகவும் ஓய்வூதியமாகவும் கிடைக்கும்.
பெரும்பாலும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேர்ந்துள்ள நிதியை இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வுக்கு பின்னரே எடுக்கிறார்கள். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னதாகவும் இந்த நிதியை எடுக்கலாம். பகுதியளவு தொகையை எடுக்கும் வசதி EPF -இல் உள்ளது.
சில சூழ்நிலைகளில் மட்டுமே பகுதியளவு தொகையை எடுக்க EPF அனுமதிக்கிறது. எந்த சூழ்நிலையில் நீங்கள் பகுதியளவு எடுக்கலாம் என்பதையும் PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான செயல்முறை என்ன என்பதையும் இங்கே காணலாம்.
EPF Amount: எந்த சூழ்நிலையில் பகுதியளவு இபிஎஃப் தொகையை எடுக்கலாம்?
- அவசர சிகிச்சை தேவைப்பட்டால் பணத்தை எடுக்கலாம்.
= குழந்தைகளின் கல்விக்காக பிஎஃப் நிதியிலிருந்தும் பணத்தை எடுக்கலாம்.
- இபிஎஃப் உறுப்பினர் (EPF Member), அவரது சகோதர=சகோதரி அல்லது மகன்-மகள் திருமணத்திற்காக பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
- விட்டை வாங்கவும், வீட்டில் பழுதுபார்க்கும் பணிகளுக்காகவும் பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
PF கணக்கிலிருந்து பணம் எடுக்கும் செயல்முறை என்ன?
இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க இரண்டு வழிகள் உள்ளன.
- EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளம்
- உமங் செயலி
EPFO Portal: EPFO போர்ட்டல் மூலம் பணத்தை எடுக்க விண்ணப்பிப்பது எப்படி?
- இதற்கு முதலில், UAN மற்றும் கடவுச்சொல்லின் உதவியுடன் EPFO போர்ட்டலில் லாக் இன் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, ஆன்லைன் சேவைக்குச் சென்று, க்ளெய்மை தேர்ந்தெடுத்து ‘ஆட்டோ மோட் செட்டில்மெண்ட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்து, கணக்குப் புத்தகம் அல்லது காசோலையைப் பதிவேற்றவும்.
- அதன் பிறகு பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு சப்மிட் செய்யவும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோ
UMANG App: உமங் செயலி மூலம் பணத்தை எடுப்பது எப்படி?
- ஆதார் எண் அல்லது மொபைல் எண் மூலம் உமங் செயலியில் முதலில் பதிவு செய்யவும்.
- இப்போது "EPFO" சேவையின் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, ஆதார் எண் அல்லது மொபைல் எண் மூலம் EPFO சேவையில் லாக் இன் செய்யவும்.
- இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்படும் OTP ஐ நிரப்பவும்.
- இதன் பின்னர் இப்போது "PF Withdrawal" என்ற ஆப்ஷனில் சென்று "Claim Form" என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதன் பிறகு தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
- அத்ன பிறகு மொபைல் எண்ணில் வரும் OTP ஐ மீண்டும் உள்ளிடவும்.
எத்தனை நாட்களுக்குள் பணம் வரும்?
பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக க்ளெய்ம் செய்து, அதாவது அதற்கான கோரிக்கையை அளித்த பிறகு, சுமார் 7 முதல் 10 வேலை நாட்களுக்குள் உறுப்பினரின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேரும். இந்த நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால், 1800-180-1425 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ