பெட்ரோல் மற்றும் டீசல் விலை திங்கட்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவு கண்டுள்ளது. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 18-20 பைசா குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை ₹ 70.83-க்கு விற்கப்படுகிறது, இது செப்டம்பர் 12, 2019 முதல் அதன் மிகக் குறைந்த மட்டமாகும். அதேசமயம், டீசல் கடந்த ஜனவரி 12 முதல் அதன் மிகக் குறைந்த அளவைத் தொட்டுள்ளது. அதாவது டீசல் விலை தலைநகரில் ₹ 63.51-க்கு விற்கப்படுகிறது. 


கடந்த நான்கு நாட்களில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) பெட்ரோல் விலை 74 பைசா குறைந்துள்ளது, அதே நேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 52 பைசா குறைந்துள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் எரிபொருள் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.


இந்நிலையில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் திங்கட்கிழமை டெல்லி மற்றும் கொல்கத்தாவில் 19 பைசா, மும்பையில் 18 பைசா மற்றும் சென்னையில் ஒரு லிட்டர் 20 பைசா குறைத்துள்ளன. டெல்லி மற்றும் கொல்கத்தாவில் டீசல் 18 பைசாவும், மும்பையில் 19 பைசாவும், சென்னையில் 20 பைசாவும் சரிந்தது.


டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை...


நாள் டெல்லி கொல்கத்தா மும்பை சென்னை
மார்ச் 09, 2020 70.83 73.51 76.53 73.58

நான்கு மெட்ரோ நகரங்களில் டீசல் விலை...


நாள் டெல்லி கொல்கத்தா மும்பை சென்னை
மார்ச் 09, 2020 63.51 65.84 66.50 67.01

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா விலைகள் கிட்டத்தட்ட ஒன்பது சதவிகிதம் சரிந்தன, இது டிசம்பர் 2008 முதல் அதன் மிகப்பெரிய தினசரி சதவிகித வீழ்ச்சியாகும், அதே நேரத்தில் WTI விலைகள் நவம்பர் 2014 முதல் மிகப்பெரிய ஒரு நாள் சரிவைக் கண்டன.


இந்த ஆண்டு இதுவரை ப்ரெண்ட் கச்சா கிட்டத்தட்ட 37 சதவீதம் சரிந்துள்ளது. ஜனவரி 8, 2020 அன்று, கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 71.75 டாலரைத் தொட்டது, வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய்க்கு 45.19 டாலராகக் குறைந்தது குறிப்பிடத்தகது.