ரயில் டிக்கெட்டில் வேறு ஒருவரின் பெயரா? என்ன செய்யலாம்? உடனே படியுங்கள்
How do I transfer a ticket from one person to another: கன்பர்ம் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய சில கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. டிக்கெட் ரத்து கட்டணத்தைத் தவிர்க்க விரும்பினால், இந்த செய்தியை படித்து பலன் பெறுங்கள்.
நீங்கள் ரயிலில் முன்பதிவு செய்துள்ளீர்கள், ஆனால் சில காரணங்களால் உங்களால் பயணம் செய்ய முடியாது, அத்தகைய சூழ்நிலையில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதை மனதில் வைத்து இந்திய ரயில்வே டிக்கெட்டுகளை மாற்றும் வசதியை தற்போது தொடங்கியுள்ளது. இது வரை வெகு சிலரே இதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ரயில்வே விதிகளின்படி, நீங்கள் ஏதேனும் காரணத்திற்காக ரயிலில் பயணம் செய்யவில்லை என்றால், உங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது, மற்றவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் நீங்கள் எளிதாக பயணம் செய்யலாம் மற்றும் மேலும் இதில் கான்சலேஷன் கட்டணம் வசூலிக்கப்படாது.
இந்நிலையில்ல டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான வழியை விளக்கிய ரயில்வே, மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் டிக்கெட்டுகளை மாற்றலாம் என்று கூறியுள்ளது. நீங்கள் 4 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்கலாம், ஆனால் அவற்றில் ஒருவர் உங்களுடன் பயணிக்க முடியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஒரு டிக்கெட்டில் உங்களுடன் உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றொரு உறுப்பினரை நீங்கள் அழைத்துச் செல்லலாம். இது எப்படி நடக்கும்? என்று நீனைக்கிறீர்கள் என்றால் இதைப் பற்றிய முழுமையான தகவலை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | எல்ஐசியின் பக்கா பாலிசி... ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை - செப். 30 வரை வாய்ப்பு!
கன்பர்ம் டிக்கெட்டில் பயணிகளின் பெயரை மாற்றுவது எப்படி
நீங்கள் கவுன்டரில் டிக்கெட் வாங்கியிருந்தாலும் அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும், பெயரை மாற்ற நீங்கள் கவுண்டருக்குச் செல்ல வேண்டும். இதற்காக, டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் மற்றும் நீங்கள் யாருடைய பெயரை பதிவு செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நபரின் ஒரிஜினல் ஐடியை புகைப்பட நகலுடன் கவுண்டருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்குப் பிறகு, ஆன்லைனில் அல்லது கவுண்டரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் பெயர் மாற்றப்படும்.
இந்த வசதி வெயிட்டிங் அல்லது RAC இல் கிடைக்காது
இதற்கு, பயணிகளின் பெயரை மாற்ற வேண்டும். IRCTC பயணிகள் தங்கள் டிக்கெட்டில் பயணிகளின் பெயரை மாற்றுவதற்கான வசதியை வழங்குகிறது. இருப்பினும், இந்த மாற்றத்தை ஒரு டிக்கெட்டில் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் டிக்கெட் கன்பர்ம் டிக்கெட்டாக இருக்க வேண்டும். நீங்கள் வெயிட்டிங் அல்லது RAC டிக்கெட்டுகளில் பெயரை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றலாம்
பயணச்சீட்டில் பயணிகளின் பெயரை மாற்ற வேண்டுமானால், சில விதிகளையும் கவனிக்க வேண்டும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே பயணிகளின் பெயரை முன்பதிவு கவுண்டரில் இருந்து மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். அதன் பிறகு இந்த வசதி வழங்கப்படாது. அதேபோல் உங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், மகன், மகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் பெயர்களை மட்டுமே மாற்ற முடியும்.
நீங்கள் போர்டிங் நிலையத்தையும் மாற்றலாம்
இது தவிர, IRCTC இணையதளத்தில் இருந்து போர்டிங் ஸ்டேஷனையும் நீங்கள் மாற்றலாம். இதைச் செய்ய, ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் லாகின் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் போர்டிங் ஸ்டேஷனின் பெயரை மாற்றலாம். ஆஃப்லைன் முறையில் (முன்பதிவு கவுன்டர்) டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டால், போர்டிங் ஸ்டேஷனின் பெயரை மாற்ற இந்திய ரயில்வே அனுமதிக்காது.
மேலும் படிக்க | LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ