மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில் தள்ளுபடி குறித்த வெளியான அப்டேட்

Indian Railway News: தற்போது ரயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Train Ticket) ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. நீங்களும் ஒரு மூத்த குடிமக்களாக இருந்து, ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், தற்போது நீங்கள் ரயில்வே தரப்பில் இருந்து பல வசதிகளைப் பெறப் போகிறீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2023, 06:13 AM IST
  • கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.
  • இந்திய ரயில்வே டிக்கெட் சலுகை குறித்து மிகப்பெரிய அப்டேட்.
  • ரயில் டிக்கெட் தள்ளுபடி குறித்து ரயில்வே அமைச்சர் கூறியது என்ன.
மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில் தள்ளுபடி குறித்த வெளியான அப்டேட் title=

இந்திய ரயில்வே டிக்கெட் சலுகை: ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரயில்வே துறையால் அவ்வப்போது பல புதிய மற்றும் அற்புதமான அப்டேட்கள் வழங்கி வருகிறன. அந்த வகையில் தற்போது ரயில்வே (Railway news) துறை மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Train Ticket) ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. நீங்களும் ஒரு மூத்த குடிமக்களாக இருந்து, ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், தற்போது நீங்கள் ரயில்வே தரப்பில் இருந்து பல வசதிகளைப் பெறப் போகிறீர்கள்.

இந்த புதிய தகவலை ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வழங்கினார்
ரயில்வே துறை மூலம் தினமும் 10,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இவற்றில் நாட்டின் மூத்த குடிமக்கள் பல வசதிகளைப் பெறுவதாகவும் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார். மேலும் இதே மக்களவையில் மூத்த குடிமக்களுக்கு இருக்கும் வசதிகள் குறித்து அனைவரும் அறிந்திராத பெரும் தகவலை தற்போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Rail Mantri Ashwini Vaishnaw) வழங்கினார்.

மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: தூங்கும் நேரம், விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு ஷாக் 

இந்நிலையில் இது தொடர்பாக ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மூத்த குடிமக்கள் ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் பெர்த்தின் (Lower Birth) வசதியைப் பெறுகின்றனர். ரயில்வேயில் இதற்கென தனி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள் கீழ் பெர்த்துக்கு எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. இந்த பயணிகளுக்கு தானாக ரயில்வே தரப்பில் இருந்து கீழ் பெர்த் வழங்கப்படும் என்றார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்
இதுமட்டுமின்றி ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுடன் இந்த வசத்யானது கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதலாக ஸ்லீப்பர் பிரிவில் 6 லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன், 3ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு முதல் ஐந்து கீழ் பெர்த்களும், 2ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று முதல் நான்கு கீழ் பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரயில் டிக்கெட் தள்ளுபடி குறித்து ரயில்வே அமைச்சர் கூறியது என்ன
ரயில் டிக்கெட் தள்ளுபடி குறித்து தகவல் அளித்த அவர், மூத்த குடிமக்கள், திவ்யாஞ்சன் மற்றும் பெண்களுக்கு மேல் பெர்த் வழங்கப்பட்டுள்ள ரயிலில் டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களால், ரயிலில் ஏதேனும் கீழ் பெர்த் காலியாக இருந்தால் அவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

யார் எவ்வளவு தள்ளுபடி பெறுவார்கள்?
இதனிடையே ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரயில்வே முன்பு 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கியது. மறுபுறம், பெண்களுக்கு வழங்கப்பட்ட விலக்கு பற்றி பேசுகையில், இவர்களுக்கு 58 வயது முதல் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த வசதியானது மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி உள்ளிட்ட அனைத்து வகை ரயில்களிலும் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வேயின் புதிய நடவடிக்கை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News