Migrant Workers Special Trains: இப்போது நாட்டில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ரயில்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அத்தகைய ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஜெனரல் பெட்டிகள் மட்டுமே இருக்கும். இந்த ரயில்கள் ஆண்டு முழுவதும் இயங்கும், முன்பதிவு செய்வதன் மூலம் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக பயணிக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே ஆய்வு


இந்திய ரயில்வே வாரியம் சமீபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் குறித்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், தொழில் நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு வரும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் ரயில்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பண்டிகைக் காலங்களில் இவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களில் அவர்களுக்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால், தற்போதுள்ள ரயில்களில் பயணிகள் நெரிசல் பிரச்னை அதிகரித்து வருகிறது. 


மேலும் படிக்க | மூத்த குடிமகனுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில் தள்ளுபடி குறித்த வெளியான அப்டேட்


விரைவில் சிறப்பு ரயில்


இந்த சிக்கலை சமாளிக்க, இந்திய ரயில்வே இப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது. இவை ஏசி இல்லாத ரயில்களாக இருக்கும். இவற்றில் குறைந்தபட்சம் 22 மற்றும் அதிகபட்சம் 26 பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில்கள் LHB பெட்டிகளாக இருக்கும் மற்றும் ஸ்லீப்பர், ஜெனரல் பெட்டிகள் மட்டுமே இருக்கும். 


அதாவது, இந்த ரயில்களில் ஏசி பெட்டிகள் இருக்காது. தற்போது, இந்த ரயில்களின் பெயர் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இந்த ரயில்களின் இயக்கம் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.


எந்தெந்த மாநிங்களில்...?


புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்கு அதிகமாக இருக்கும் அந்த மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றன. அவற்றில் உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் முதல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அசாம், ஒடிசா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை முக்கியமானவை. 


ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சிக்கனமான ரயில்கள் (புலம்பெயர்ந்த தொழிலாளர் சிறப்பு ரயில்) ஆண்டு முழுவதும் நிரந்தரமாக இயங்கும். இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம், குறைந்த வருமானம் உள்ளவர்கள் தங்கள் இடங்களுக்குச் செல்ல முடியும். இதனால், மற்ற ரயில்களில் கூட்ட நெரிசலும் குறையும்.


மேலும் படிக்க | ரயிலில் ஏறவில்லையா... 10 நிமிடம் தான் டைம் - அப்புறம் டிக்கெட் வேறு நபர்களுக்கு மாறும்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ