ஜன்தன் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்தால் உங்களுக்கு 5000 ரூபாய் கிடைக்கும்
உங்கள் கணக்கில் பணம் இல்லையென்றாலும், 5 ஆயிரம் ரூபாய் வரை திரும்பப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த திட்டம் ஏழைகளுக்கு மிகவும் பயனளிக்கிறது.
Pradhan Mantri Jan Dhan Account: மத்திய அரசின் ஜன் தன் யோஜனாவில், வாடிக்கையாளர்களுக்கு நிதி உதவியுடன், பல சிறப்பு வசதிகளும் உள்ளன. அந்த அம்சங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா...? உங்கள் கணக்கில் பணம் இல்லையென்றாலும், 5 ஆயிரம் ரூபாய் வரை திரும்பப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த திட்டம் ஏழைகளுக்கு மிகவும் பயனளிக்கிறது. உங்கள் கணக்கிலிருந்து 5 ஆயிரம் ரூபாயை எவ்வாறு எடுக்கலாம் என்பதைக் குறித்து பார்க்கலாம். (Jandhan Account Overdraft Facility)
5 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறும் வசதியைப் பெறுங்கள்
ஜன்தன் யோஜனா கணக்கில், வாடிக்கையாளர்களுக்கு ரூ .5000 ஓவர் டிராஃப்ட் (Overdraft Facility on PMJDY) வசதி கிடைக்கிறது. இதற்கான நிபந்தனை என்னவென்றால், பி.எம்.ஜே.டி.ஒய் (PMJDY) கணக்கையும் ஆதார் அட்டையுடன் (Aadhaar Card) இணைக்க வேண்டும். ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கில் பணம் இல்லாதபோதும் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
ஆதார் அட்டை முக்கியமானது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவில் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த, ஆதார் அட்டை வைத்திருப்பது மிக அவசியம். PMJDY கீழ் பலர் வங்கிக்கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஓவர் டிராஃப்ட் வசதியைப் பற்றி மிகக் குறைந்த அளவிலான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தெரிந்துள்ளது. நீங்கள் ஒரு விசியத்தை மட்டும் செய்யுங்கள். ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்கில் ஆதார் அட்டை இணைப்பது அவசியம். நீங்கள் இணைத்து விட்டால், உங்களுக்கு ரூ .5,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம்.
ALSO READ | மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய அரசாங்கத்தின் இந்த 5 திட்டங்கள்....என்ன அவை?
இந்த மக்களுக்கு நன்மை கிடைக்காது
பிரதான் மந்திரி ஜன் தன் கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், ஓவர் டிராஃப்ட் வசதியை பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கிக் கணக்கைத் திறப்பதே பிரதமர் மோடியின் (PM Modi) நோக்கமாக இருந்தது. ஜன் தன் யோஜனாவின் கீழ், நீங்கள் 10 வயதுக்குக் குறைவான வயதுடைய குழந்தைக்கும் வங்கிக்கணக்கு திறக்கலாம்.
பணத்தை 6 மாதங்கள் கணக்கில் வைக்க வேண்டும்
இந்த வசதியைப் பயன்படுத்த, வங்கிக்கணக்கு வைத்திருப்பவர் முதல் 6 மாதங்களுக்கு போதுமான பணத்தை கணக்கில் வைத்திருக்க வேண்டும், இந்த நேரத்தில் அவர்கள் அவ்வப்போது இந்தக் கணக்கில் பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டும். அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் (Rupay Debit Cards) வழங்கப்படுகின்றன. அவை இந்த பரிவர்த்தனைகளுக்கு எளிதாகப் பயன்படுத்தப்படலாம்.
ALSO READ | தீபாவளிப் பரிசாக மிக மலிவான Home loan-களை அளிக்கும் 8 வங்கிகளின் பட்டியல் இதோ
ஜன் தன் யோஜனாவின் நன்மைகள்:
குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை
இலவச மொபைல் வங்கி வசதி
ரூ .30000 வரை லைஃப் கவர் பெறுங்கள்
நாடு முழுவதும் பண பரிமாற்ற வசதி
அரசாங்க திட்டங்களின் நிதியுதவி நேரடி வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
காப்பீடு, ஓய்வூதிய பொருட்கள் வாங்க எளிதானது
வைப்புத்தொகையின் மீதான வட்டி
இந்த திட்டம் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கும் உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR