Retirement Plan: பல ஆண்டுகளாக ஒரு நிறுவனத்திலோ அல்லது அரசு துறையிலோ பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் ஓய்வு காலம் குறித்த சிந்தனை எப்போது இருக்கும். ஓய்வு பெற்ற பின் வரும் ஓய்வூதியம், அதன்பின் இருக்கும் வாழ்க்கைப்பாடுகள் குறித்த பல யோசனைகள் அவர்களுக்கு இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் ஓய்வூதியத்தைப் பற்றி நீங்களும் கவலைப்படுகிறீர்களா? ஓய்வுக்குப் பிறகு நீங்கள் எப்படி நிதி ரீதியாக வலுவாக இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? பின் வரும் தகவல்கள் உங்களுக்கானது தான். பலரும் இதனை தாங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். ஆனால் எந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 


வேலையின் தொடக்கத்திலிருந்தே, ஓய்வுக்காக சிறிது முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் வயதான காலத்தில் நீங்கள் ஒரு பெரிய தொகையை குவிக்கலாம். அதற்கு என தனி திட்டமும் உள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்களின் ஓய்வு காலத்தில் ஐந்து கோடி ரூபாய் வரை பெறலாம்.


மேலும் படிக்க | போஸ்ட் ஆபிசில் முதலீடு செய்தவர்களுக்கு... மூன்றரை லட்சம் தரும் மத்திய அரசு!


இந்த ரூ.442 ஃபார்முலா என்ன?


இந்த ஃபார்முலா இப்போது வேலையைத் தொடங்குபவர்களுக்கு சிறந்தது என்பதை நிரூபிக்கும். நீங்கள் 25 வயதில் இருந்து முதலீட்டைத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது, உங்கள் சம்பளத்தில் இருந்து தினமும் ரூ.442 சேமித்து, புதிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்யுங்கள். அதாவது, ஒரு மாதத்தில் நீங்கள் ரூ.13,260 முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.13,260 முதலீடு செய்ய வேண்டும். 60 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்தால், ஓய்வு பெறும் போது வட்டியுடன் சேர்த்து சுமார் ஐந்து கோடி ரூபாய் வசூல் செய்யலாம். உங்கள் முதலீட்டில் 10 சதவீத வட்டியைப் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பிறகு கூட்டு வட்டியின் கீழ், உங்கள் பணமும் அதிகரிக்கும்.


கூட்டு வட்டியின் பலன் கிடைக்கும்


35 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்த பிறகு, உங்களின் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.56 லட்சத்து 70 ஆயிரத்து 200 ஆக இருக்கும். உங்களின் இந்தத் தொகையான ரூ. 56,70,200 என்பது கூட்டு வட்டியுடன் ஐந்து கோடிக்கும் அதிகமான தொகையாகிறது. அதாவது, ஐந்து கோடியில், 4.55 கோடி ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். 60 வயதிற்குப் பிறகு NPS முதிர்ச்சியடையும் போது, நீங்கள் 60 சதவிகிதத் தொகையை மட்டுமே எடுக்க முடியும். இதிலும் உங்களுக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கும். இதன் பிறகு, மீதமுள்ள இரண்டு கோடி ரூபாயை வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வாழ்நாள் முழுவதும் நிலையான தொகையைப் பெறலாம்.


மேலும் படிக்க | 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புதிய விதிகள்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ