ஆதார் கார்டில் உடனே இதைச் செய்யுங்கள், இல்லையெனில் சிக்கல் தான்
நமது ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை நாம் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும், குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமல் வேறு எந்த தகவலையும் புதுப்பிக்க முடியாது. உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றலாம், எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நாட்டிலுள்ள மக்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு என அனைத்து ஆவணங்களுடனும் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை இப்போது அனைத்திற்கும் ஐடி சான்றாக செயல்படுகிறது. ஆதார் அட்டையில் பெயர், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், பிறந்த தேதி, வீட்டு முகவரி மற்றும் பல உள்ளிட்ட நமது தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் உள்ளன. இருப்பினும், சில சமயங்களில் இந்தத் தகவலும் புதுப்பிக்கப்பட வேண்டி இருக்கும்.
ஆதார் அட்டையில் புதுப்பித்தல்
அதன்படி நமது ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை நாம் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும், குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமல் வேறு எந்த தகவலையும் நம்மால் புதுப்பிக்க முடியாது. எனவே உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். அதன்படி ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஆன்லைனில் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை எவ்வாறு புதுப்பிப்பது
* முதலில் அதிகாரப்பூர்வ ஆதார் போர்ட்டலைப் பார்வையிடவும் https://ask.uidai.gov.in/
* உங்கள் மொபைல் எண் மற்றும் captcha உடன் உள்நுழைக. விவரங்களை நிரப்பியதும், அனுப்பு OTP என்பதைக் கிளிக் செய்க.
* வலதுபுறத்தில் உள்ள பாக்சில் OTP ஐ உள்ளிட்டு, SUBMIT OTP என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Continue க்ளிக் செய்ததும் . மொபைலை உங்களுடன் வைத்திருங்கள், இதனால் நீங்கள் உடனடியாக OTP ஐ உள்ளிடலாம்.
* அடுத்த பக்கத்தில் நீங்கள் ஆதார் சேவைகள் புதிய சேர்க்கை மற்றும் அப்டேட் ஆதார் ஆகியவற்றிற்கான விருப்பங்களைப் பெறுவீர்கள், இங்கே Update ஆதார் என்பதைக் கிளிக் செய்க.
* அடுத்த ஸ்க்ரீனில் பெயர், ஆதார் எண், முகவரி வகை மற்றும் நீங்கள் அப்டேட் செய்ய விரும்புவது போன்ற விருப்பங்களைக் காணலாம்.
* இப்போது இங்கே கட்டாய விருப்பங்களை நிரப்பி, what do you want to update’ பிரிவில் மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
* அடுத்த பக்கத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் captcha கேட்கப்படும். எல்லா புலங்களையும் நிரப்பி OTP ஐ அனுப்பு என்பதைக் கிளிக் செய்க. பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு அதை சரிபார்க்கவும், பின்னர் Save and Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.
* இறுதியாகஅனைத்து விவரங்களையும் இருமுறை சரிபார்த்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்க.
* இதற்குப் பிறகு நீங்கள் ஒரு அப்பொய்ன்ட்மென்ட் ஐடியுடன் Success ஸ்க்ரீனை பெறுவீர்கள். Book Appointment விருப்பத்தை சொடுக்கி, ஆதார் சேர்க்கை மையத்தில் ஒரு இடத்தைப் பதிவுசெய்க.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை வைத்து பேங்க் பேலன்சை எவ்வாறு சரிபார்ப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ