ரயில் டிக்கெட்: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி - கல்லூரிகளுக்குச் செல்பவர்கள், சொந்த ஊருக்குச் சென்று வருபவர்கள் என ரயிலில் பயணம் செய்வோர் ஏராளம். மற்ற போக்குவரத்து வசதிகளை விட ரயில் பயணத்தை அதிகப் பேர் விரும்புவதற்குக் காரணம் அதிலுள்ள வசதிகள் மற்றும் குறைந்த டிக்கெட் கட்டணமும் ஆகும். ரயில்களில் மிக விரைவாகவும் பயணிக்கலாம். அதன்படி ரயில்களில் பயணம் செய்பவர்கள் ரயில்வே தொடர்பான முக்கியமான விதிமுறைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். ரயில்களில் செய்யக் கூடியது, செய்யக் கூடாது என்னென்ன என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அந்தவகையில் நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது, ​​​​ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும், அப்படி இல்லையெனில் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் டிக்கெட்
உண்மையில், ரயிலில் ஏறும் முன் இந்த வேலையைச் செய்வது மிகவும் முக்கியமானது. அது வேறு ஒன்றும் இல்லை, அது ரயில்வே டிக்கெட் பற்றி தான். ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன் ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் அபராதமும் விதிக்கப்படலாம். பொதுவாக ஒரு சிலர் தங்களின் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய திட்டமிடுகின்றனர். ஆனால் அப்படி செய்வது சட்டப்பூரவாக குற்றமாகும், மேலும் இதற்கு கடுமையான தண்டனையும் விதிக்கப்படலாம்.


மேலும் படிக்க | DA Hike: 3 லட்சம் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!


ரயில்வே டிடிஇ
இந்த நிலையில் ரயில்வே டிடிஇகள் அப்படிப்பட்டவர்களை பிடித்து அபராதமும் விதிக்கலாம். அதே நேரத்தில், உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை விட அபராதம் அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு முறையும் ரயிலில் பயணிக்கும் போதெல்லாம், வேலிடிட்டி டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மட்டுமே பயணம் செய்ய வேண்டும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், ரயில்வே சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டுமே விதிக்கப்படலாம்.


எனவே ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் ஒருவர் சிக்கிக் கொண்டால், அந்த நபர் மீது ரயில்வே சட்டம் பிரிவு 138ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த நபர் பயணிக்கும் தூரம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து சாதாரண சிமிகளே ஸைட் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் ரூ. 250 அல்லது அதற்கு இணையான கட்டணம், எது அதிகமோ அது அபராதமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் டிக்கெட் எடுத்து நீங்கள் போகும் இடத்துக்கு முன்பாகவே ரயில் நடுவில் நின்று, தொடந்து செல்ல ரயில்வே சார்பாக எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றால், நீங்கள் முழு பணத்தையும் திருப்பிக் கேட்கலாம். தொடர்ந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாலும், பயணிகள் அங்கு செல்ல விரும்பவில்லை என்றால், பயணத்திற்கான கட்டணத்தை கோரலாம். ஆனால் பயணிகள் அந்த டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும்.


மேலும் படிக்க | ரூ.2,000 நோட்டு விவகாரம்: ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ