FD திட்டத்தில் முதலீடு.... அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
FD Investment Tips: நிலையான வைப்புத்தொகை என்னும் FD முதலீடு அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.
FD Investment Tips: நிலையான வைப்புத்தொகை என்னும் FD முதலீடு அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு சாதாரண மக்களை விட அதிக வட்டி கிடைக்கிறது. FD என்பது பாதுகாப்பு, நிலையான வருமானம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் முதலீட்டு விருப்பமாகும். இது குறித்த விதிகளை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் எத்தனை FD கணக்குகளை திறக்கலாம்? அதிக கணக்குகளை நிர்வகிப்பது எப்படி?
1. ஒருவர் எத்தனை FD கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். இதற்கு வரம்பு இல்லை. இருப்பினும், பல FD கணக்குகளை நிர்வகிப்பதற்கு சரியான திட்டமிடல் தேவை.
2. கணக்கு எண், வைப்புத் தொகை, வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தேதி போன்ற விவரங்களை பராமரிக்கவும். எக்ஸெல் ஷீட் அல்லது செயலியின் உதவியுடன் இந்த வேலையை நீங்கள் எளிதாக செய்யலாம்.
3. அனைத்து FD கணக்குகளுக்கும் ஒரே முதிர்வு தேதி இருக்க வேண்டாம். வெவ்வேறு காலங்களில் அவை முதிர்ச்சியடையும் போது பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
4. முதிர்ச்சியடைந்த பிறகும், பணம் தேவைப்படாது என்று உங்களுக்குத் தெரிந்தால், தானாகப் புதுப்பிப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். இதன் மூலம், FD முதிர்வுக்குப் பிறகு தானாகவே புதுப்பிக்கப்படும்.
5. FD முதிர்ச்சியடையும் போது, இந்தப் பணம் உங்களுக்குத் தேவையா அல்லது எவ்வளவு தேவை என்று யோசித்து, அதற்கேற்ப முடிவெடுக்கவும். அந்த நேரத்தில் உங்களுக்கு பணம் தேவையில்லை என்றால், புதிய FD அல்லது வேறு ஏதேனும் முதலீட்டு திட்டங்களில் மீண்டும் முதலீடு செய்யலாம்.
வெவ்வேறு வங்கிகளில் FD திறப்பது சிறந்ததா?
வெவ்வேறு வங்கிகளில் FD திறப்பது சிறந்தது. இதற்கான காரணங்கள் சில
1. டெபாசிட் இன்சூரன்ஸ்: வங்கி ஒன்றில், ரூ. 5 லட்சம் வரை டெபாசிட்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) காப்பீடு வழங்குகிறது. எனவே, வெவ்வேறு வங்கிகளில் FD செய்வதன் மூலம், அதிக கவரேஜ் கிடைக்கும்.
2. சிறந்த வட்டி விகிதங்கள்: வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பல வங்கிகளில் FD திறப்பது சிறந்த வருமானத்தை பெற உதவும்.
3. ஆபத்து குறைவு: வெவ்வேறு வங்கிகளில் FD கணக்கு வைப்பதன் மூலம் உங்கள் ஆபத்தைக் குறைக்கலாம். அந்த வங்கிகளில் ஒன்று எதிர்காலத்தில் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் முழுத் தொகையையும் அதே வங்கியில் முதலீடு செய்யாததால் உங்கள் ஆபத்து குறைவாக இருக்கும்.
வெவ்வேறு முதிர்வு காலங்களைக் கொண்ட FDகளை வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
பணப்புழக்கம்: வெவ்வேறு முதிர்வு காலங்களைக் கொண்ட FDகளை வைத்திருப்பதன் மூலம், உங்களது பண புழக்கத்திற்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கும்
நெகிழ்வுத்தன்மை: கல்வி, பயணம் அல்லது அவசரநிலை போன்ற பல்வேறு இலக்குகளுக்கு பணம் பெற வசதியாக இருக்கும்.
அதிக வருமானம்: வெவ்வேறு வங்கிகள் FDக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பல FDகளைத் திறப்பதன் மூலம் அதிகபட்ச வருமானத்தைப் பெறலாம்.
வரிச் சலுகைகள்: வரிச் சேமிப்பு நிலையான வைப்புத்தொகை போன்ற சில நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்), வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையவை.
பல FD கணக்குகளைத் திறப்பதற்கு முன், மனதில் கொள்ள வேண்டியவை
முதலீட்டின் நோக்கம்
நீங்கள் ஏன் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்று முதலில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்காக நீங்கள் சேமிக்கிறீர்கள் என்றால், குறுகிய கால அவகாசத்துடன் FD-களில் முதலீடு செய்யுங்கள். இதேபோல், நீண்ட கால நோக்கங்களுக்காக, நீண்ட கால FD ஐத் தேர்வு செய்யவும்.
வட்டி விகிதங்கள் மற்றும் முதலீட்டு காலம்
FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனைத்து வங்கிகளிலும் வட்டி விகிதங்களை ஒப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெரிய தொகையை முதலீடு செய்யும் போது, ஒரு சிறிய வித்தியாசம் கூட உங்கள் வருமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெவ்வேறு காலவரையறைகளுடன் FD திட்டங்களில் முதலீடு செய்வது பயனுள்ளதாக. இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதன் மூலம், தேவைப்படும் நேரத்தில் முதிர்ச்சிக்கு முன் அனைத்து FD களையும் உடைக்க வேண்டிய அவசியமில்லை.
FD மீதான வரி
FD திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். ஒரு நிதியாண்டில் வட்டி ரூ. 40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ. 50,000) அதிகமாக இருந்தால், வங்கி டிடிஎஸ் (மூலத்தில் வரி விலக்கு) கழிக்கிறது. எனவே, இந்த வரம்பை மீறாமல் இருக்க, முறையாக திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள்.
முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கான அபராதம்
முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. உங்களிடம் பல FD கணக்குகள் இருந்தால், அவசரகாலத்தில் ஏதேனும் ஒன்றை உடைத்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். எல்லா FD களையும் உடைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
நியமன வசதி
உங்களின் ஒவ்வொரு FD கணக்குகளுக்கும் ஒரு நாமினியை பரிந்துரைக்கவும். இதைச் செய்வதன் மூலம், எதிர்பாராத சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தினர் பணத்தைக் கோருவது எளிதாகிறது.
மேலும் படிக்க | கடைசி காலத்தில் கூடுதல் பென்ஷன் வேண்டுமா? ஓய்வூதியதாரர்கள் இதை செய்தால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ