முதலீட்டாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, RBI ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனிகள் (HFC) மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC) புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. நாமினியை உருவாக்குவது முதல் FD முன்கூட்டியே திரும்பப் பெறும் விதிகள் வரை அனைத்தும் இதில் அடங்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
FD முதலீடு பாதுகாப்பானது என்பதால் பெரும்பாலானோர் அதில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், FD என்னும் நிலையான வைப்புத்தொகை தொடர்பான புதிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது, அதன் கீழ் ஜனவரி 1, 2025 முதல், FD செய்த 3 மாதங்களுக்குள் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால், வட்டி எதுவும் கிடைக்காது.
FD தொடர்பான RBI அமல்படுத்தியுள்ள புதிய விதி
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகளின்படி, FD முதலீடு செய்த 3 மாதங்களுக்குள் பணத்தை எடுக்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கும். சிறிய வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் (ரூ 10,000 வரை) 3 மாதங்களுக்குள் எந்த வட்டியும் இல்லாமல் எடுக்கலாம். பெரிய டெபாசிட்டுகளுக்கு, அசல் தொகையில் 50% அல்லது ரூ. 5 லட்சம் இரண்டில் எது குறைவாக உள்ளதோ, அந்த அளவிலான தொகையை மூன்று மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் ஓரளவு திரும்பப் பெறலாம். மீதமுள்ள டெபாஸிட் தொகைக்கான வட்டி கிடைக்கும்
கடுமையான நோய் ஏற்பட்டால், வைப்புத்தொகையின் காலத்தைப் பொருட்படுத்தாமல், முதலீடு செய்யப்பட்ட முழு தொகையையும் வட்டியின்றி முன்கூட்டியே திரும்பப் பெற முதலீட்டாளர் அனுமதிக்கப்படுகிறார். மேலும், சரியான நேரத்தில் புதுப்பிப்பு செய்யப்படும் முதலீடுகளுக்கு, இப்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) முதிர்வுத் தேதிக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன் முதிர்வு விவரங்களைப் பற்றி முதலீட்டார்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஜனவரி 1, 2025 முதல் செயல்படுத்தப்பட்ட மாற்றங்கள்
நாமினி புதுப்பிப்பு
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) முறையான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட நியமனப் படிவங்களின் ரசீதை ஒப்புக்கொள்வதற்கும், ரத்து செய்தல் அல்லது நாமினிக்கு மாற்றுவது குறித்தும் தெரிவிப்பதற்கும் ஒரு முறையான அமைப்பை ஏற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஒப்புகையை அனைத்து வாடிக்கையாளர்கள் கோரினாலும், கோராவிட்டாலும் அவர்களுக்கு வழங்குவது அவசியம்.
மேலும் படிக்க | PF ஏடிஎம் கார்டு, மொபைல் செயலி இந்த நாளில் அறிமுகம்: எவ்வளவு தொகை எடுக்கலாம்?
பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகள்
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, முதலீட்டாளர்ட்கள் பொது வைப்புத்தொகையை, தேவைப்பட்டால், டெபாசிட் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை வைக்க அனுமதிக்கப்படுவார்கள். மூன்று மாதங்களுக்குள், டெபாசிட் செய்பவர் அசல் தொகையில் அதிகபட்சமாக 50% அல்லது ரூ. 5 லட்சத்தை (எது குறைவாக இருந்தாலும்) வட்டி இல்லாமல் எடுக்கலாம். இதன் மூலம் மீதம் உள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
டெபாசிட் முதிர்வுத் தகவல்
முன்னதாக, NBFCகள் டெபாசிட் செய்பவர்களுக்கு அவர்களின் டெபாசிட்களின் முதிர்வு தேதியை குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். ஆனால் இப்போது சரியான நேரத்தில் புதுப்பிப்புகளுக்கு, NBFC முதிர்வு தேதிக்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக டெபாசிட்டருக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க | SIP: ரூ.10,000 முதலீட்டை ரூ.21 கோடியாக மாற்றிய சூப்பர் மியூச்சுவல் ஃபண்டு இது தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ