One Nation, One Ration Card, அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம், நீங்கள் நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும், எந்த மாநிலத்தில் இருந்தாலும், நீங்கள் அரசு வழங்கும் ரேஷனை வாங்க முடியும். நீங்கள் இட மாற்றம் செய்யும் புதிய ரேஷன் கார்டை பெற வேண்டிய அவசியமில்லை. உங்கள் பழைய ரேஷன் கார்டு முழுமையாக செல்லுபடியாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு (One Nation, One Ration Card) கிடைக்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இதனால் மிகப்பெரிய நன்மை இருக்கும். இப்போது அவர்கள் எந்த மாநிலத்திலிருந்தும் உணவு தானியங்களை அரசாங்கம் கொடுக்கும் விலையில் வாங்க முடியும். 


ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைய உங்கள் ரேஷன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ன் கீழ், நாட்டின் 81 கோடி மக்கள் பொது விநியோக முறை (PDS) மூலம் ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் என்ற விலையிலும், கோதுமையை ஒரு கிலோவுக்கு இரண்டு ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கிறது. 


இந்தத் திட்டத்தின் படி, 2020 அக்டோபர் 01 முதல்  28 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், பொது வினியோக முறையின் கீழ், பயனாளிகள் ஒரே அளவிலான மானிய விலையில் உணவு தானியங்களையும், தங்களுக்கு விருப்பமான எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும்  அரசின் மானிய விலையில் வாங்க இயலும்.


ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு, ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்த, உங்களிடம் இரண்டு முக்கியமான ஆவணங்கள் இருக்க வேண்டும். முதலில் உங்கள் ரேஷன் கார்டு, இரண்டாவது ஆதார் அட்டை. வேறொரு மாநிலத்திற்குச் சென்று ரேஷன் கார்டைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் தகவல்கள் ஆதார் எண் மூலம் சரிபார்க்கப்படும். ஒவ்வொரு ரேஷன் கார்டு கடைக்கும் ஒரு மின்னணு விற்பனை சாதனம், அதாவது எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் இருக்கும். இதன் மூலம், பயனாளி விபரங்கள் ஆதார் எண் மூலம் சரிபார்க்கப்படும்.


'ஒன் நேஷன், ஒன் ரேஷன்' கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரும், பழைய ரேஷன் கார்டு தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், புதுப்பிக்கப்படும் போது, புதிய விதிகளின் கீழ் புதுப்பிக்கப்படும். இதனால் அது  நாடு முழுவதிலும் செல்லுபடியாகும். புதிய ரேஷன் கார்டை தனித்தனியாக உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, அதே ரேஷன் கார்ட்டின் அடிப்படையில், ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு தயாரித்து, அதன் நன்மைகளை அடையலாம்.


தமிழ்நாட்டில் நேற்று இந்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. இது தவிர, ஆந்திரா, பீகார், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியு, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா , ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து, உத்தரகண்ட், லட்சத்தீவுகள் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்கள் அம்மல்படுத்தியுள்ளன. மீதமுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மார்ச் 2021 க்குள்  தேசிய அளவிலான போர்டபிளிடி திட்டமான ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டில் ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


ALSO READ | தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் EPS!!