நிதி நெருக்கடி என்பது, நம்மில் பெரும்பாலோர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், நிச்சயம் சந்தித்திருப்போம். அது போன்ற சமயங்களில், உறவினர் அல்லது நண்பர்களிடம் நாம் அணுகுவது உண்டு. அது முடியாமல் போனால், அல்லது அவர்களிடம் உதவி கேட்பதில் தயக்கம் ஏதும் இருந்தால், அந்த சமயத்தில் நம் மனதில் முதலில் தோன்றுவது தனி நபர் கடன். ஏனென்றால், குறைந்த காலத்தில் பெறக் கூடிய எளிதான கடன், தனிநபர் கடன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிநபர் கடன் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்


தனிநபர் கடன் என்பது, பிணை இல்லாத கடன் என்பதால், எளிதில் கிடைத்து விடும். வீட்டுக் கடன் அல்லது வாகன கடன் போல், ஆவணங்கள் பெரிதாக தேவையில்லை. அதிலும் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், ஒப்பீட்டளவில் குறைந்த வட்டியில் கூட கடனை பெறலாம். ஆனால் தனிநபர் கடன் வாங்கும் முன் (Personal Loan Tips), நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.


தேவையான கடன் தொகை (Loan Amount)


தனி நபர் கடன் (Personal Loan) வாங்கும் முன் முதலில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், எந்த அளவிற்கு பணம் தேவைப்படும் என்பதுதான். எந்த அளவிற்கு பணம் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். கடன் தான் வாங்குகிறோமே என்று, ஒரு ரூபாய் 50,000 கூடுதலாக வாங்கி, செலவு செய்து கொள்ளலாம் என்று எண்ணுவது, பின்னாளில் நம்மை கடன் வலையில் சிக்க வைத்து விடும்.


கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான காலம்


தனிநபர் கடனை பொறுத்தவரை, எவ்வளவு சீக்கிரம் திரும்ப செலுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு குறைந்த வட்டியில் கடனை (Loan) பெறலாம். உதாரணத்திற்கு, ஆறு மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை, உங்கள் கடனை EMI மூலம் திரும்பச் செலுத்தலாம். இந்நிலையில் உங்களால் முடிந்த அளவு குறைந்தபட்ச காலகட்டத்தில், கடனை திரும்பச் செலுத்தும் அளவிற்கான, கால அளவை தேர்ந்தெடுப்பதால், வட்டியை சேமிக்கலாம். அதற்கு நீங்கள் எவ்வளவு இஎம்ஐ செலுத்த முடியும் என்பதை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப உங்கள் கடன் காலத்தை தேர்ந்தெடுக்கவும்.


மேலும் படிக்க | குழந்தைகளுக்கான புதிய பாலிசியை அறிமுகம் செய்தது LIC: முழு விவரம் இதோ


கடன் வாங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள்


சில வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க வட்டி விகிதத்தை குறைவாக வைத்துவிட்டு, கடனை பெறுவதற்கான பிற கட்டணமான செயலாக்க கட்டணம், கடனுக்கான காப்பீடு என, பல வகைகளில் கட்டணத்தை போட்டு தீட்டிவிடுவார்கள். இதனால், நீங்கள் அதிக அளவில் பணம் செலுத்த நேரிடலாம். எனவே கடன் பெறுவதற்கான கட்டணங்கள் குறித்து, நீங்கள் கடன் பெறும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் முன்னதாகவே கேட்டு தெரிந்து கொள்ளவும்.


கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர்


உங்களது கிரெடிட் ஸ்கோர் (Credit Score)அல்லது சிபில் ஸ்கோர் (CIBIL SCORE) சிறப்பானதாக இருந்தால், ஒப்பிட்டு அளவில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஏனென்றால் சிபில் ஸ்கோர் என்பது, உங்கள் பொறுப்பை நீங்கள் எந்த அளவுக்கு நிர்வகிக்கிறீர்கள் என்பதை உணர்த்தக்கூடிய மதிப்பெண் என்பதால், உங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். எனவே, உங்கள் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.


மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ