குழந்தைகளுக்கான புதிய பாலிசியை அறிமுகம் செய்தது LIC: முழு விவரம் இதோ

LIC Amritbaal Plan: நீண்ட கால நோக்கில் தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக பணத்தை சேமிக்க நினைக்கும் பெற்றோருக்கான திட்டமாக இது உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2024, 07:31 PM IST
  • இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களும் இதில் சேர்வதற்கான தகுதியும் என்ன?
  • இந்தத் திட்டத்திற்கான கால வரம்பு என்ன?
  • இதன் திட்டத்தின் மெச்யூரிட்டு ஆப்ஷன்கள் என்ன?
குழந்தைகளுக்கான புதிய பாலிசியை அறிமுகம் செய்தது LIC: முழு விவரம் இதோ

LIC Amritbaal Plan: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC அவ்வப்போது பல்வேறு பிரிவினருக்காக பிரத்யேகமாக பல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. சமீபத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் "அம்ரித்பால்" என்ற பாரம்பரிய நிதி திட்டத்தை அறிமுகம் செய்தது. நீண்ட கால நோக்கில் தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக பணத்தை சேமிக்க நினைக்கும் பெற்றோருக்கான திட்டமாக இது உள்ளது. நான்-லிங்க்ட், நான்-பார்ட்டிசிபேடிங்க திட்டமான இது தங்கள் குழந்தைகளின் கல்வி தேவைகளுக்காக முன்னரே திட்டமிடும் பெற்றோர்களுக்கு நிதி நிலைத்தன்மை மற்றும் ஆதரவை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

LIC Amritbaal Plan: இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களும் இதில் சேர்வதற்கான தகுதியும் என்ன?

அம்ரித் பால் திட்டம் 30 நாட்கள் முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கானது. இதன் மெச்சூரிட்டி வயது 18 முதல் 25 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் அடிப்படை தொகைக்கு 80 ரூபாய் என்ற விகிதத்தில் உத்தரவாதமாக இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பாலிசியின் கால அளவில் ஒரு நல்ல கார்ப்பசை சேர்க்க முடியும்.

இந்தத் திட்டத்திற்கான பிரீமியம் செலுத்தும் விதிமுறைகள் நெகிழ்வுத் தன்மையுடன் உள்ளன. இதன் வரம்பு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாக உள்ளது. அதிகபட்ச தொகைக்கு வரம்பு குறிப்பிடப்படவில்லை.

LIC Amritbaal Plan: இந்தத் திட்டத்திற்கான கால வரம்பு என்ன?

வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் பாலிசிகளுக்கு குறைந்தபட்ச கால அளவு 10 ஆண்டுகளாகும். சிங்கிள் பிரீமியம் பாலிசிகளுக்கு கால அளவு ஐந்தாண்டுகளாக உள்ளது. சிங்கிள் மற்றும் வரையறுக்கப்பட்ட ஆகிய இரண்டு பிரீமியம் பாலிசிகளுக்கும் அதிகபட்ச கால அளவு 25 ஆண்டுகளாக உள்ளது.

மேலும் படிக்க | EPF Withdrawal: பிஎஃப் பணத்தை பணி ஓய்வுக்கு முன் எடுக்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன?

இதன் திட்டத்தின் மெச்யூரிட்டு ஆப்ஷன்கள் என்ன

இந்த திட்டத்தின் முதிர்வின்போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட இணைப்பு தொகைகளுடன் சம் அஷ்யூர்ட் தொகையும் அதாவது உறுதியளிக்கப்பட்ட தொகையும் கிடைக்கும். மெச்சூரிட்டி தொகையை 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் அல்லது 15 ஆண்டுகள் என்ற தவணைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியும் பாலிசிதாரருக்கு அளிக்கப்படும்.

LIC Amritbaal Plan: திட்டத்தின் பிரீமியம் தொகை எவ்வளவு?

இந்த திட்டத்திற்கான ப்ரீமியம் தொகை (Premium Amount) பற்றி இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை

இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன?

எல்ஐசி மூலம் அளிக்கப்படும் மற்ற சேமிப்பு திட்டங்களைப் போலவே அம்ரித்பால் திட்டத்திலும் பாலிசிதாரர் கடன்களை பெறலாம். இதன் மூலம் கூடுதல் நிதி நெகிழ்வுத்தன்மை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில்  ஏஜெண்டுகள், விநியோக வங்கிகள் போன்ற எல்ஐசியின் ஆஃப்லைன் சேனல்கள் மூலமோ அல்லது நேரடியாக நிறுவனத்தின் வலைத்தளம் மூலமோ சேரலாம். 

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நாடு முழுவதும் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டிருக்கின்றது. இதில் பல்வேறு சமூகக் குழுக்களை ஈர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு காப்பீட்டுக் கொள்கைகள் வழங்கப்படுகின்றன. பல தரப்பு பாலிசிகள் எல்ஐசி மூலம் வழங்கப்படுகின்றன. இது வாழ்க்கைக்கு தேவையான பாதுகப்பை அளிக்கின்றது. 

மேலும் படிக்க | CIBIL Score: இதை கடைபிடியுங்கள் போதும்... கிரெடிட் ஸ்கோர் 750+ ஆக எகிறி விடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News