இந்தியன் ரயில்வே: அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபரா நீங்கள்? அப்படி என்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆம்!! ரயில்களில் தூங்கும் நேரத்தை ரயில்வே மாற்றியுள்ளது. முன்னர், பழைய விதிகளின் படி, பயணிகள் இரவு பயணத்தின் போது அதிகபட்சமாக ஒன்பது மணி நேரம் தூங்கலாம். ஆனால் தற்போது இந்த அவகாசம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் தூங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரயில்வே மூலம் மாற்றப்பட்ட விதிகளின்படி இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். அதாவது, இப்போது தூங்கும் நேரம் 8 மணிநேரமாக குறைந்துள்ளது. இந்த மாற்றம் தூங்கும் வசதி கொண்ட அனைத்து ரயில்களிலும் பொருந்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயணிகள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வந்தனர்


பயணிகள் அனைவரும் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகின்றது. நீங்களும் ரயிலில் பயணம் செய்தால், தூங்குவதற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த புதிய நேரத்தைப் பின்பற்றுங்கள். இது நீங்களும் மற்ற பயணிகளும் நன்றாக தூங்க அனுமதிக்கும். 


மிடில் பர்த், அதாவது நடு பெர்த்தில் பயணம் செய்பவர்கள் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவதாகவும், காலையில் அதிக நேரம் வரை தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் கீழ் பெர்த், அதாவது லோயர் பெர்த்தில் பயணிக்கும் பயணிகள் நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இதனால், கீழே இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் இதன் காரணமாக பயணிகளிடையே தகராறும் ஏற்படுகிறது.


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வேயின் புதிய நடவடிக்கை இதோ


உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்


இந்த புகார்களைக் கருத்தில் கொண்டு, ரயில்வே தூங்கும் விதிகள் மற்றும் நேரத்தை மாற்றியுள்ளது. புதிய விதியின்படி, நடு பெர்த்தில் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். அதன் பிறகு அவர்கள் தங்கள் பெர்த்தை காலி செய்ய வேண்டும். புதிய விதியின்படி, நடு இருக்கை பயணிகள் காலை 10 மணி முதல் 6 மணி வரை பெர்த்தை திறந்து தூங்கலாம். இதற்கு முன்னும் பின்னும் அவர்கள் பெர்த்தை திறந்து தூங்கினால், அவர்களை தடுக்க பிற பயணிகளுக்கு உரிமை உள்ளது. காலை 6 மணிக்கு மேல், நடு இருக்கையை இறக்கி, கீழ் இருக்கைக்கு மாற வேண்டும். நடு பெர்த்தில் இருப்பவர் இதைச் செய்யாவிட்டால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.


புதிய விதியின்படி, கீழ் இருக்கையில் பயணம் செய்யும் முன்பதிவு டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் காலை 10 மணிக்கு முன் அல்லது மாலை 6 மணிக்குப் பிறகு தங்கள் இருக்கையில் தூங்க முயற்சிக்க முடியாது. இந்த விதிகளை பயணிகள் மீறினால், அந்த பயணிகள் மீது ரயில்வே சார்பில் புகார் அளிக்கப்படும்.


இந்தியன் ரயில்வே


இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  


மேலும் படிக்க | ஏசி பெட்டியில் பயணிப்பவரா? ரயில்வேயின் இந்த ரூல்ஸ் தெரியுமா? பாத்து நடந்துக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ