ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வேயின் புதிய நடவடிக்கை இதோ

Indian Railways Special Trains: மேற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் 6 ஜோடி கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. முழுமையான பட்டியலை இங்கே பார்க்கவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2023, 10:49 AM IST
  • இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
  • பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய முடிவு.
  • 6 ஜோடி கோடைகால சிறப்பு ரயில்களை தொடங்கம்.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வேயின் புதிய நடவடிக்கை இதோ title=

இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், ரயிலுக்குள் இருக்கும் வசதிகளுடன், புதிய சிறப்பு ரயில்களை இயக்குவது போன்றவை அடங்கும். அந்தவகையில் தற்போது பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, மேற்கு ரயில்வே 6 ஜோடி கோடைகால சிறப்பு (Western Railway) ரயில்களை தொடங்கியுள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
இந்த நிலையில் இது தொடர்பாக மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) சுமித் தாக்கூர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், அவர்களின் வசதிக்காகவும் தற்போது 6 ஜோடி சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படயுள்ளது என்றார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய முடிவு..விரைவில் அறிவிப்பு, ஊழியர்கள் ஹேப்பி

* ரயில் எண். 09039 பாந்த்ரா டெர்மினஸ் - அஜ்மீர் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 19 முதல் செப்டம்பர் 27, 2023 வரை இயக்கப்படும்.

* இதேபோல், ரயில் எண். 09040 அஜ்மீர் - பாந்த்ரா (டர்மினஸ்) வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 20 முதல் செப்டம்பர் 28, 2023 வரை இயக்கப்படும்.

* ரயில் எண். 09183 மும்பை சென்ட்ரல் - பனாரஸ் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 30, 2023 வரை இயக்கப்படும்.

* அதேபோல், ரயில் எண். 09184 பனாரஸ் - மும்பை மத்திய வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 21 முதல் செப்டம்பர் 1, 2023 வரை இயக்கப்படும்.

* ரயில் எண் 09321 இந்தூர் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 30, 2023 வரை இயக்கப்படும்.

* இதேபோல், ரயில் எண். 09322 ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - இந்தூர் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 28 முதல் செப்டம்பர் 1, 2023 வரை இயக்கப்படும்.

* ரயில் எண் 09324 இந்தூர்-புனே வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை இயக்கப்படும்.

* இதேபோல், ரயில் எண். 09323 புனே - இந்தூர் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 21 முதல் செப்டம்பர் 1, 2023 வரை இயக்கப்படும்.

*ரயில் எண் 09343 டாக்டர் அம்பேத்கர் நகர் - பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 25, 2023 வரை இயக்கப்படும்.

* இதேபோல், ரயில் எண் 09344 பாட்னா-டாக்டர் அம்பேத்கர் நகர் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 26, 2023 வரை இயக்கப்படும்.

* ரயில் எண் 09417 அகமதாபாத்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 28, 2023 வரை இயக்கப்படும்.

* அதேபோல், ரயில் எண். 09418 பாட்னா - அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 29, 2023 வரை இயக்கப்படும்.

மேலும் படிக்க | 8th Pay Commission: சம்பளத்தில் பெரிய ஏற்றம்.. ஊழியர்கள் காத்திருக்கும் ‘அந்த’ அறிவிப்பு விரைவில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News