மாஸ்க் ஆதார் டவுன்லோடு செய்வதில் முக்கிய அப்டேட் -தெரிஞ்சு வச்சுக்கோங்க..!
Aadhaar : மாஸ்க் ஆதார் பதிவிறக்கம் செய்வதில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆதார் எதற்கு பயன்படும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
Aadhaar Card News Tamil | இந்தியா முழுவதும் முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையில் பல வகைகள் உள்ளன. உங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் மாஸ்க் ஆதார் எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையில் ஆதார் எண்கள் கூட முழுமையாக தெரியாது. சாதாரண ஆதார் அட்டையில் உங்களின் 12 இலக்க ஆதார் எண் இருக்கும். ஆனால் இதில், கடைசி நான்கு இலக்க எண்கள் மட்டுமே எல்லோரும் பார்க்க முடியும். கூடுதலாக உங்கள் பெயர், ஊர் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். இந்த மாஸ்க் ஆதார் அட்டையை பிறரிடம் கொடுக்கும்போது உயோகித்துக் கொள்ளலாம்.
மாஸ்க் ஆதார் முக்கியத்துவம்
இப்போது சைபர் மோசடிகள் அதிகரித்துள்ளன. ஒருவரின் ஆதார் கிடைத்தாலே போதும் தனிப்பட்ட மொபைல் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனை வைத்து மோசடியாக ஒரு மொபைல் சிம் கார்டுகூட வாங்க முடியும். மோசடி ஆதாரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை வைத்து பல மோசடிகளையும் அரங்கேற்றலாம். இப்படிப்பட்ட சூழலில் மோசடிகளை தடுக்கவும், உங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் மாஸ்க் ஆதார் அவசியமாகிறது. அரசு சாராத எந்தவொரு சேவைகளுக்கு ஆதார் பயன்படுத்தும்போது மாஸ்க் ஆதார் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
மாஸ்க் ஆதார் பெறுவது எப்படி?
- UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்
-மாஸ்க்டு ஆதார் ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்
- தேவையான தகவல்களை நிரப்பவும்.
- OTP சரிபார்ப்பு கேட்கும். மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை கொடுத்தால் இந்த செயல்முறை முடிவடையும்.
- இப்போது உங்கள் மாஸ்க் ஆதார் அட்டை காண்பிக்கும். அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
சாதாரண ஆதார் அட்டையை பெறுவது எப்படி?
- ஆதார் சேவையின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI பக்கத்துக்கு செல்ல வேண்டும்
- அதில் யூசர் லாகின் விவரங்களை உள்ளிட்டு லாகின் பக்கத்துக்கு செல்லுங்கள்
- My Aadhaar Download ஆப்சனை தேர்வு செய்யவும்
- உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி சரிபார்க்கவும்
- இந்த செயல்முறையை முடித்ததும் உங்களின் ஆதாரை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | EPFO: UAN நம்பர் இல்லையா... கவலை வேண்டாம்... இந்த வகையில் ஈஸியா செக் பண்ணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ