நவம்பர் 30-க்குள் வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? எளிய செயல்முறை இதோ

Life Certificate: ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வழங்குகின்றனர். இந்த சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2024, 05:57 PM IST
  • ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும்.
  • ஓய்வு பெற்றவர்கள், வீட்டில் இருந்தபடியே வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
நவம்பர் 30-க்குள் வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? எளிய செயல்முறை இதோ title=

Life Certificate: ஓய்வு பெற்ற ஊழியர்கள், தடை இல்லாமல் ஓய்வூதியம் பெற, ஆண்டுக்கு ஒருமுறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். அதாவது இந்த மாதத்திலேயே ஓய்வூதியதாரர்கள் இந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வழங்குகின்றனர். இந்த சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். 

எனினும், முன்பு இருந்தது போல் அல்லாமல், தற்போது இதற்கான செயல்முறைகள் மிக எளிதாகிவிட்டன. ஓய்வு பெற்றவர்கள், வீட்டில் இருந்தபடியே வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Digital Life Certificate

இதற்கு ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் தேவைப்படும். ஓய்வூதியம் பெறுவோர் பிசிக்கல் ஆயுள் சான்றிதழை உருவாக்குவதில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் வகையில், இந்த வசதியை அரசு தொடங்கியுள்ளது. இது பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்தப்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான டிஜிட்டல் சேவையாகும். மத்திய அரசு, மாநில அரசு அல்லது வேறு ஏதேனும் அரசு நிறுவனங்களில் ஓய்வூதியம் பெறுவோர் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஓய்வூதிய விதிகள்: ஓய்வூதியம், பணிக்கொடைக்கான தகுதிச் சேவை... அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை எவ்வாறு உருவாக்குவது, சமர்ப்பிப்பது?

- ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் மற்றும் ஆதார் ஃபேஸ் ஆர்டி செயலியின் உதவியுடன் முகம், கைரேகை, ஐரிஸ் போன்ற தங்கள் அடையாளங்களை பாதுகாப்பாக பதிவு செய்யலாம்.

- இதற்கு, முதலில் தொலைபேசியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

- அதே போல் குறைந்தபட்சம் 5MP கேமரா சென்சார் தொலைபேசியில் இருக்க வேண்டும். 

- இது தவிர, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் போன்ற ஓய்வூதிய அமைப்புகளில் உங்கள் ஆதார் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

- இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து உங்கள் மொபைலில் ஆதார் ஃபேஸ்ஆர்டி (AadhaarFaceRD) மற்றும் ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆப் (Jeevan Pramaan Face App) ஆகியவற்றை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

- ஆபரேட்டர் அங்கீகாரத்தை முடித்த பிறகு உங்கள் முகத்தை வெரிஃபை செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, ஓய்வூதியதாரர் தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.

- முன் கேமராவிலிருந்து ஒரு புகைப்படத்தை கிளிக் செய்து, அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

- இந்த செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும். 

- இந்த லிங்கை கிளிக் செய்து ஆயுள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கிய பிறகு, போஸ்ட்இன்ஃபோ செயலிக்குச் (Postinfo App) சென்று இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். இந்தியன் போஸ்ட் பேமென்ட் பேங்க், கிராமின் டாக் சேவக் மற்றும் போஸ்ட்மேன் போஸ்ட்இன்ஃபோ ஆப் மூலம் பயோமெட்ரிக் விவரங்களை நிரப்ப உங்களுக்கு உதவும். எனினும், இதற்கு நீங்கள் ரூ.70 கட்டணம் செலுத்த வேண்டும். 

ஆவணங்களைச் சமர்ப்பிக்க வீடு தேடி வரும் டோர் ஸ்டெப் வங்கி சேவையையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள்  'Doorstep Banking App' -ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி, இதற்கு இலவச தொலைபேசி எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்றும் இந்த வேலையைச் செய்து முடிக்கலாம். ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: CPPS புதிய ஓய்வூதிய முறை.... அரசின் பரிசு, இனி அதிக வசதிகள் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News