சான் பிரான்சிஸ்கோ (San Fransisco) : நல்லவர்களை இணைப்பது மற்றும் சமூக வலைப்பின்னல்களை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் பேஸ்புக் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த சமூக ஊடகத்தில் போலி மற்றும் தீய நோக்கம் கொண்டவர்கள் வைத்துள்ள கணக்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது பேஸ்புக் (Facebook) இதுபோன்ற போலி கணக்குகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இருந்து 1,196 கணக்குகள், 994 தீய நோக்குடனான கணக்குகள் மற்றும் போலி 7,947 பக்கங்கள் மற்றும் 110 குழுக்களை பேஸ்புக் நீக்கியுள்ளது. அக்டோபரில், பேஸ்புக் கணக்குகள், பக்கங்கள் மற்றும் குழுக்களின் 14 நெட்வொர்க்குகள் அகற்றப்பட்டன. அதில் எட்டு குழுக்கள் - ஜார்ஜியா, மியான்மர், உக்ரைன் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழுக்கள். மீதமுள்ளவை ஈரான் (Iran), எகிப்து, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சேர்ந்த ஆறு நெட்வொர்க்குள் அகற்றப்பட்டன.


மியான்மரில் (Myanmar), 36 பேஸ்புக் கணக்குகள், ஆறு பக்கங்கள், இரண்டு குழுக்கள் மற்றும் ஒரு பிஆர் ஏஜென்சியுடன் இணைந்த இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்டன. பேஸ்புக் ஒரு அறிக்கையில், "மியான்மரில் நவம்பர் தேர்தலுக்கு முன்னர் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற நெட்வொர்க்கைக் கண்டறிந்தோம்" என்று கூறினார். சமூக ஊடகத்தில், மியான்மரில் இயக்கப்படும் 10 பேஸ்புக் கணக்குகள், 8 பக்கங்கள், 2 குழுக்கள் மற்றும் 2 இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் அகற்றியது. 


அமெரிக்காவில் (America), அமெரிக்க சந்தைப்படுத்தல் நிறுவனமான ரலி ஃபோர்ஜ் உடன் தொடர்புடைய 202 பேஸ்புக் கணக்குகள், 54 பக்கங்கள் மற்றும் 76 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நீக்கியது.


பேஸ்புக் கூறுகையில், 'துஷ்பிரயோகத்தைத் தடுக்க நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்றது.


ALSO READ | Govt JOB: 12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை... ரூ.29,200-92,300 வரை ஊதியம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR