பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகிளா சம்ரித்தி திட்டம் மற்றும் பிற திட்டங்களுக்கும் இது பொருந்தும். இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் கணக்கு மூடப்படும்.  முதலீடு அல்லது திரும்பப் பெறுதல் அல்லது பிற பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 7 விதிகள்!


முன்னதாக, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், மார்ச் 31, 2023 நிலவரப்படி, அது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு தனிநபரிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், அதற்கு மாற்றாக ஆதார் பதிவுச் சீட்டு அல்லது பதிவு எண்ணை வழங்கலாம். கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் ஆதார் அட்டையை வழங்குவது அவசியம்.


ஒரு நபர் ஆறு மாதங்களுக்குள் ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்கத் தவறினால், அவர்களின் சிறு சேமிப்புத் திட்டக் கணக்கு முடக்கப்பட்டு, ஆதார் எண் வழங்கப்படும் வரை மீண்டும் திறக்கப்படாது. மேலும், கணக்கு திறக்கும் போது பான் கார்டு அல்லது படிவம் 60ஐ சமர்பிப்பது கட்டாயமாகும். இந்த ஆவணத்தை சமர்ப்பிக்கத் தவறினால், இரண்டு மாதங்களுக்குள் பான் கார்டு கிடைக்கும் வரை முதலீட்டுக் கணக்கு முடக்கப்படும். கூடுதலாக, தபால் அலுவலகம் அல்லது வங்கிக்கு மற்ற ஆவணங்களும் தேவைப்படலாம்.


மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், சிறுசேமிப்புத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் இந்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டைச் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டை சிறு சேமிப்பு திட்டங்களுடன் இணைப்பதன் மூலம், எந்தவொரு தவறான அடையாளங்களையும் களைந்து, முதலீட்டாளர்களுக்கு நம்பகமான தரவுத்தளத்தை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் இதனைக் கருத்தில் கொண்டு தங்களின் சிறு சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் எண்ணை இதுவரை கொடுக்காமல் இருந்தால் கொடுத்துவிடுங்கள்.


மேலும் படிக்க | PPF-சுகன்யா சம்ரிதி விதிகளில் பெரிய மாற்றம், நிதி அமைச்சர் புதிய உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ