PPF-சுகன்யா சம்ரிதி விதிகளில் பெரிய மாற்றம், நிதி அமைச்சர் புதிய உத்தரவு

PPF-SSY Rule Change: இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திலும் முதலீட்டாளர்களுக்கு பான் (PAN) மற்றும் ஆதாரை (AADHAAR) கட்டாயமாக்கியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2023, 01:52 PM IST
  • ஆதார் பதிவு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
  • வரம்புக்கு மேல் முதலீடு செய்வதற்கு பான் கார்டு கட்டாயம்.
PPF-சுகன்யா சம்ரிதி விதிகளில் பெரிய மாற்றம், நிதி அமைச்சர் புதிய உத்தரவு title=

பான்-ஆதார் அட்டை: குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), மகிளா சம்மன் யோஜனா மற்றும் தபால் அலுவலகம் ஆகியவற்றிலும் முதலீடு செய்திருந்தால், இந்தச் செய்தி கட்டாயம் படியுங்கள். ஏனெனில் இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தத் திட்டங்கள் அனைத்திலும், பான் மற்றும் ஆதார் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

ஆதார் பதிவு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த மாற்றங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சிறுசேமிப்புத் திட்டத்தின் KYC ஆகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதார் எண் இல்லாமலும் இந்த சேமிப்பு திட்டங்களில் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட்டது. தற்போது நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புக்கு பின், முதலீட்டாளர்கள் எந்த விதமான முதலீடுற்கும் ஆதார் பதிவு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், வரம்புக்கு மேல் முதலீடு செய்வதற்கு பான் கார்டு கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission வருகிறதா? 44% ஊதிய உயர்வு விரைவில்? மாஸ் அப்டேட்!!

ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்
இந்த நிலையில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது உங்களிடம் ஆதார் இல்லை என்றால், ஆதாருக்கான பதிவு சீட்டை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 'சிறு சேமிப்பு திட்ட' முதலீட்டுடன் முதலீட்டாளரை இணைக்க, கணக்கு துவங்கிய ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும்.

சிறு சேமிப்புத் திட்டக் கணக்கைத் திறக்கும் போது உங்களுக்கு ஆவணங்கள் தேவைப்படும்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு சீட்டு
- பான் எண், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை 30 செப்டம்பர் 2023க்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்கு அக்டோபர் 1, 2023 முதல் தடை செய்யப்படும்.

மேலும் படிக்க | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News