IRCTC: இந்தியா முழுவதும்  அன்லாக் நடைமுறை தொடங்கியுள்ளதால், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பயணிகள் ரயில் சேவை, வழக்கம் போல் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. வழக்கமான ரயில் சேவைகள் இந்தியாவில் எப்போது இயக்கத் தொடங்கும் என்பது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பு மூலம் தகவல் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு ஒரு திட்டவட்டமான தேதியை வழங்க இயலாது என்று கூறிய யாதவ், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு, இதுவரை ரயில்வேயில் (Railway) பயணம் செய்யும் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 87 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். 


“வழக்காமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு ஒரு திட்டவட்டமான தேதியை வழங்க முடியாது. பொது மேலாளர்கள், மாநில அரசாங்கங்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர், இப்போதும் கூட, நிலைமை இயல்பாக இல்லை என்பதால், எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ”என்றார். 


ALSO READ | இந்தியாவின் அதிசயம்... சீனாவை போல் கண்ணாடியால் கட்டப்பட்ட முதல் Skywalk பாலம்..!!


நடப்பு நிதியாண்டில் இதுவரை பயணிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் ரயில்வேயின் வருமானம் ரூ .4,600 கோடியாக உள்ளது என்றும், 2021 மார்ச் மாதத்திற்குள் இது ரூ .15,000 கோடியாக உயரும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ”கடந்த நிதியாண்டில், இந்த பிரிவில் இருந்து கிடைத்த  வருவாய் ரூ .53,000 கோடி.  எங்கள் வருவாய், கடந்த ஆண்டை விட 87 சதவீதம் குறைவாக உள்ளது” என்று யாதவ் மேலும் கூறினார்.


இருப்பினும், பயணிகள் பிரிவில் ஏற்பட்ட இழப்பு, சரக்கு மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து ஈடுகட்டப்படும். இது கடந்த ஆண்டின் சரக்கு வருவாயை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள், ஏற்கனவே கடந்த ஆண்டு கிடைத்த சரக்கு வருவாயில், 97 சதவீதத்தை இப்போதே ஈட்டி விட்டது என்றும் அவர் கூறினார்.


கொரோனா வைரஸ் (Corona virus) தொற்றுநோயால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் ரயில்வே பயணிகளின் வருவாயில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார்.


தற்போது இயங்கும் ரயில்களில்,  சராசரியாக 30-40 சதவிகிதம் பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். தொற்றுநோய் குறித்த பயம் இன்னும் பயணிகளிடம் உள்ளது என்பதையே இது பிரதிபலிக்கிறது.


ரயில்வே தற்போது 1,089 சிறப்பு ரயில்களை இயக்குகிறது என்றும், கொல்கத்தா மெட்ரோ அதன் 60 சதவீத ரயில்களை இயக்குகிறது என்றும், மும்பை புறநகர் 88 சதவீத ரயில்களை இயக்குகிறது என்றும், 50 சதவீத அளவில் சென்னை (Chennai) புறநகர் சேவைகள் இயங்கி வருவதாகவும் யாதவ் மேலும் தெரிவித்தார்.


ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், வழக்கமான ரயில் சேவைகள் படிப்படியாக “மெதுவாக” மீண்டும் தொடங்கப்படும் என்றும் யாதவ் கூறினார்.


ALSO READ | IRCTC விதிகளில் மாற்றம்... இனி ரயிலில் உணவு கிடைக்காதா.. உண்மை நிலை என்ன..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR