இந்திய ரயில்வே தனது பயணிகளின் நலனுக்கென அடிக்கடி பல்வேறு விதிகளை மாற்றி வரும் நிலையில், தற்போது ரயில்வே லோயர் பெர்த்தின் விதிகளை மாற்றியுள்ளது.  ரயில் பயணம் பலருக்கும் சௌகரியமான ஒன்றாக இருக்கிறது, தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.  லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வரும் சூழலில், பயணிகள் தங்களுக்குப் பிடித்த இருக்கையில் பயணம் செய்ய, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகின்றனர்.  இதில் பெரும்பாலான ரயில் பயணிகள் விரும்புவது லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் தான், ஆனால் இப்போது இதனை முன்பதிவு செய்வது கடினமானதாக மாறிவிடும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் 44% ஊதிய உயர்வு



தற்போது ரயில்வே லோயர் பெர்த்களை மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்கென்று ஒதுக்கியுள்ளது.  மாற்றுத்திறனாளிகளின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.  ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், 2 கீழ் இருக்கைகள், ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் என ஒதுக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்த இருக்கைகளில் அவர்களுடன் சேர்த்து  பயணம் செய்பவர்களும் அமரலாம்.  


அதேசமயம், கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் பயணம் செய்ய அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.  இதுதவிர, மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே லோயர் பெர்த்களை வழங்குகிறது. ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4-5 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி கோச்சிலும் 3-4 லோயர் பெர்த்கள் மற்றும் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ரயிலில் பெர்த்கள் ஒதுக்கப்படுகிறது.  மூத்த குடிமக்கள் அல்லது கர்ப்பிணி பெண்களுக்கு டிக்கெட் முன்பதிவின்போது மேல் இருக்கை ஒதுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் ஊதிய உயர்வு: டிஏ மட்டுமல்ல, இன்னும் பல கொடுப்பனவுகள் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ