1) ரயிலின் ஒவ்வொரு பெட்டியின் கதவுகளிலும் அவசர எச்சரிக்கை சங்கிலிகள் வைக்கப்பட்டு இருக்கும், இந்த அவசர சங்கிலியை பிடித்து இழுப்பது என்பது பலருக்குள்ளும் இருக்கும் ஒரு ஆசை.  ஆனால் இந்த சங்கிலியை இழுப்பது உங்களை பெரியளவில் சிக்கலில் சிக்க வைத்துவிடும்.  மருத்துவ அவசரநிலை, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், விபத்து, குழந்தை அல்லது முதியவர்கள் அல்லது ஊனமுற்ற நபர் யாரேனும் அவரது துணையை தவறவிட்டால், இதுபோன்ற அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே அந்த அவசர எச்சரிக்கை சங்கிலியை இழுக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே விதிகள் கூறுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2) பண்டிகை காலங்களில் ரயில் பயணிகளுக்கு அவர்கள் சரியாக செல்ல வேண்டிய இடத்திற்கான முன்பதிவு கிடைக்காமல் போக நேரிடும், இப்போது ரயில்வே இந்த சிக்கலை தீர்க்க வகை செய்துள்ளது.  பயணிகள் அவர் டிக்கெட்டைப் பெற்ற பிறகு அவர்கள் செல்ல வேண்டிய சரியான இடத்திற்கு முன்பதிவு செய்யலாம்.  பயணம் செய்யும் போது, ​​அவர்கள் TTE-யிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணத்தை நீட்டித்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | 8th Pay Commission வருகிறதா? 44% ஊதிய உயர்வு விரைவில்? மாஸ் அப்டேட்!!


3) இந்திய இரயில்வே ரயிலின் நடுத்தர பெர்த் தொடர்பாக மிக முக்கியமான விதியை அறிவித்துள்ளது. மேல் மற்றும் கீழ் பெர்த்களுக்கு இடையில் நடுத்தர பெர்த்கள் அமைந்துள்ளது.  கீழ் மற்றும் மேல் பெர்த்கள் இருக்கைகளாகப் பயன்படுத்தப்படும்போது, பயணிகள் பகலில் நடுத்தர பெர்த்தை மடிக்க முடியாது என்று விதி அறிவுறுத்துகிறது.  இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் நடுத்தர பெர்த்தில் தூங்க முடியும்.


4) பெரும்பாலும், அசல் போர்டிங் ஸ்டேஷனுக்கான ரயிலில் ஏறுவதை பயணிகள் தவறவிடக்கூடிய சம்பவங்கள் சில சமயம் ஏற்பட நேரிடும்.  இருப்பினும் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே டூ-ஸ்டாப் விதிகளின் மூலம், டிக்கெட் சேகரிப்பாளர் இருக்கையை மற்றொரு பயணிக்கு மாற்ற முடியாது.  ரயில் இரண்டு நிறுத்தங்களை கடக்கும் வரை அல்லது ஒரு மணி நேரம் அந்த குறிப்பிட்ட பயணியின் அவர்களது இருக்கையை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது.


5) சுவாரஸ்யமானதாக இருக்கும் ரயில் பயணத்தில் நாம் மற்றவருக்கு தொந்தரவை கொடுத்துவிட கூடாது.  பொதுவாக, இரவு 10 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சக பயணிகள் செயல்படக்கூடாது.  ரயிலில் பயணிகள் சரியாக ஓய்வெடுக்க இரவு விளக்குகளைத் தவிர, ரயில் பெட்டியில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும்.  மேலும் ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் உணவு வழங்கப்படமாட்டாது.


6) பேருந்துகள் அல்லது விமானங்களில் பயணம் செய்யும்போது அங்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அவற்றின் உண்மையான விலையை விட அதிகமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். ரயில்களில் சிற்றுண்டிகள், உணவுகள் மற்றும் பானங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய ரயில்வே குழு ஒன்றை நியமித்துள்ளது.  இந்த குழுவினர் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதையும், தயாரிப்புகள் தரமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.  விற்பனையாளர் தரமான பொருட்களை விற்கவில்லை என்றால் அவர் மீது புகார் அளிக்கலாம், அதன் பிறகு அவருக்கு அதிக அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவரது உரிமம் ரத்து செய்யப்படலாம்.


7) ரயிலில் அதிக சத்தம் எழுப்புவதை ரயில்வே நிர்வாகம் தடை செய்துள்ளது.  மொபைல் அல்லது வேறு ஏதேனும் சாதனத்தில் வீடியோ அல்லது இசையை சத்தமாக வைத்து கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.  ஒலியளவைக் குறைவாக வைத்திருக்கவும் அல்லது பயணிகள் ஹெட்ஃபோன்கள் அல்லது இயர்போன்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.  ஓய்வெடுக்கும் அல்லது தூங்கும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மொபைலில் சத்தமாக பேசாமல் அமைதியாக பேச வேண்டும்.


மேலும் படிக்க | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ