Indian Railways: கவச் தொழில் நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது... ரயில் விபத்துக்கள் தடுக்கப்படுமா..!!
ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வடிவமைப்பு மற்றும் தரநிலை ஆராய்ச்சி அமைப்பு இதர 3 மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கவச் தானியங்கி அமைப்பு முறையை உருவாக்கியது.
ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வடிவமைப்பு மற்றும் தரநிலை ஆராய்ச்சி அமைப்பு இதர 3 மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கவச் தானியங்கி அமைப்பு முறையை உருவாக்கியது. கவாச், லோகோமோட்டிவ் பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கவச் என்பதன் பொருளே கவசம் என்பதாகும். இந்தியாவில் ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP) கவச். 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்தது. ரிசர்ச் டிசைன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (RDSO) மூலம் மூன்று இந்திய நிறுவனங்கள் உருவாக்கிய இந்த கவச் எனும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை ரயில்வே அமைச்சகம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
கடந்த பத்தாண்டுகளில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது. 2012-13ல் 122 என்ற அளவில் இருந்த விபத்துக்கள் 2022-23 நிதியாண்டில் 48 என்ற அளவாக குறைந்துள்ளது. எனினும், கடந்த ஜூன் 2 அன்று ஒடிசாவின் பாலசோரில் நடந்த ஒரு சோகமான சம்பவம் ரயில்வே பாதுகாப்பு பற்றிய கவலைகளை அதிகரித்தது. சுமார் 290 உயிர்களை பலிவாங்கிய இந்த விபத்து இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும். இதனை தொடர்ந்து அக்டோபரில் நடந்த மற்றொரு சம்பவம் மீண்டும் ரயில் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தியது. ஆந்திராவின் விஜயநகரத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.
ரயில் கவச் தொழில்நுட்பம் (Indian Railways), அபாய சிக்னலை கவனிக்காமல் கடந்து செல்வது, அதிவேகம், மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில் ரயில் ஓட்டுநரை எச்சரிக்கும். எச்சரிக்கைக்கு பிறகும், ரயிலை ஓட்டுநா் நிறுத்தவில்லை என்றால், கவச் அமைப்பு முறையில் உள்ள சில பிரத்யேக அம்சங்கள் தாமாக செயல்பட்டு, ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி, அதை நிறுத்தச் செய்யும் என்கின்றனர் வல்லுநர்கள்.
மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்!
ரயில் வழித்தடங்களில் கவச் அமைப்புமுறையை நிறுவுவதற்கான நடைமுறைகள் கடந்த 2016ம் ஆண்டில் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-ஆம் ஆண்டுவரை முன்னோட்டப் பணிகள், பரிசோதனைகள், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு தொடக்கத்தில், ரயில் வழித்தடங்களில், கவச் அமைப்புமுறையை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் இதுவரை 1,500 கி.மீ. வழித்தடத்துக்கு கவச் அமைப்பு முறை நிறுவப்பட்டு, முழுமையாக செயல்படுகிறது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்தார் . மேலும் 3,000 கி.மீ. தொலைவுக்கு கவச் அமைப்பு முறையை நிறுவும் நடைமுறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றால். மேலும் 2025-26ம் ஆண்டில் ஆண்டுக்கு 5,000 கி.மீ. வழித்தடத்துக்கு கவச் நிறுவும் வகையில் திறன் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.
இந்தியாவில் பரவலான ஏற்றுக்கொள்ளல் மற்றும் அதன் வருங்கால ஏற்றுமதி சந்தைக்கான கவாச்சின் திறன் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரேசில், துருக்கி, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகள் கவச் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன என்றார்.
கவாச்சின் முக்கியத்துவம், இரயில் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துவது, சிக்னல் அமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் விபத்துகளைத் தடுப்பது ஆகியவற்றில் உள்ளது. ரயில் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தில் அதன் முன்னேற்றங்கள் பாதுகாப்பான மற்றும் திறமையான ரயில்வே நெட்வொர்க்கிற்கான உறுதிமொழியைக் கொடுக்கிறது.
மேலும் படிக்க | Indian Railways: விரைவில் வருகிறது வந்தே பாரத் சாதாரண்... குறைந்த கட்டண ரயில் சேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ