காசி-தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பின் போது, ஆன்மீக மையங்களான வாரணாசி மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 17-18 தேதிகளில் வாரணாசிக்கு தனது இரண்டு நாள் பயணத்தின் போது காசி-தமிழ் சங்கமம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாகக் காசிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை தடங்க உள்ள நிலையில்,  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும் இந்த ரயிலுக்கு நாளை இரவு 8 மணிக்குத் திருநெல்வேலியில் வரவேற்பு விழா நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு ஆன்மீக வழிபாட்டு மையங்களுக்கு இடையேயான ரயில் இணைப்பு தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும். இந்த புதிய ரயில் மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய புனித நகரங்களில் இருந்து காசிக்கும் செல்லும் பக்தர்களுக்கு பயனளிக்கும்.


காசி - கன்னியாகுமரி ரயில் சேவை டிசம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பனாரசிலிருந்து கன்னியாகுமரி விரைவு ரயில் (16368) இயக்கப்பட இருக்கிறது. மறு மார்க்கத்தில் டிசம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரியிலிருந்து பனாரஸ் காசி எக்ஸ்பிரஸ் ரயில் (16367) சேவை துவங்க உள்ளது. காசி - கன்னியாகுமரி ரயிலுக்கான (Indian Railways), பயணச் சீட்டு முன் பதிவு விரைவில் துவங்க உள்ளது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 22 பெட்டிகள் கொண்ட ரயிலில், ஒரு ஏசி முதல் வகுப்பு, இரண்டு ஏசி டூ-டையர் கோச்சுகள், மூன்று ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், மூன்று ஏசி மூன்றடுக்கு எகானமி கோச்கள், ஆறு ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சுகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்று திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று,  ஆகியவை இருக்கும். ஒரு பேண்ட்ரி கார் மற்றும் ஒரு லக்கேஜ்-கம்-பிரேக் வேன்-ம் இருக்கும்.


காசி - கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலை டிசம்பர் 17 ஆம் தேதி பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா அறிவித்தார். டிசம்பர் 18 ஆம் தேதி, பிரதமர் மோடி வாரணாசி சந்திப்பு - புது தில்லி இடையிலான இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை மற்றும் டோஹ்ரிகாட்-மவு எலெக்ட்ரிக் ரயில் சேவையையும் தொடக்கி வைக்கிறார். கூடுதலாக, பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் மற்றும் இரண்டு சரக்கு ரயில்களில் இருந்து 10,000 வது இன்ஜினை அவர் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.


மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்


மொத்தம் ரூ.12,579 கோடியில் நிறைவடைந்த 23 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார், மொத்தம் ரூ.6,576 கோடியில் 14 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். வாரணாசியில் டிசம்பர் 17 முதல் 30 வரை திட்டமிடப்பட்ட காசி தமிழ் சங்கமம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


காசி தமிழ் சங்கமம் தொடர்பாக பிரதமர், X தளத்தில் பதிவிட்டுள்ளார்: “கலாச்சாரங்களின் கொண்டாட்டமான  காசி தமிழ் சங்கமத்திற்கு மக்களை வரவேற்க காசி மீண்டும் தயாராகி வருவதால் மிகுந்த உற்சாகம் நிறைந்து உள்ளது. இந்த மன்றம் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகும், இது ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ என்ற உணர்வை வலுப்படுத்துகிறது”.


மேலும் படிக்க | Indian Railways: விரைவில் வருகிறது வந்தே பாரத் சாதாரண்... குறைந்த கட்டண ரயில் சேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ