Indian Railway Rules: இந்தியா முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஐஆர்சிடிசி பல விதிகளை வகுத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், ஆனால் சில சமயங்களில் கடைசிவரை உறுதி செய்யப்படாததால் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அல்லது வேறு திட்டங்களை யோசிக்கவேண்டிய சூழல் உருவாகும். சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் நாம் ரயிலை மிஸ் செய்யவேண்டி இருக்கும். இது போன்ற நேரத்தில் நமது இருக்கை வேறு ஒருவருக்கு போய்விட்டது என்று பயணிகள் நினைக்கின்றனர். ஒருவேளை நீங்கள் ரயிலை மிஸ் செய்துவிட்டீர்கள் என்றால் டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கையில் இருக்கும் செல்போனை வைத்து இவ்வளவு லாபம் பார்க்கலாமா? இது தெரியாம போச்சே!


ஒருவேளை ரயிலைத் தவறவிட்டால், உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை எவ்வளவு நேரத்திற்கு அப்படியே இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.  சில எதிர்பாராத காரணங்களால் நீங்கள் ரயிலை தவறவிட்டீர்கள் என்றால் அந்த சூழ்நிலையில் ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையை முன்பதிவு செய்ய ஒரு விதி உள்ளது.  அடுத்த இரண்டு ரயில் நிலையங்கள் வரை நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் வேறு ஒருவருக்கு கொடுக்கப்படாது. ரயிலை மிஸ் செய்துவிட்டால் அடுத்த இரண்டு நிலையங்கள் வரை நீங்கள் மாறி ஏறி கொள்ள முடியும்.  இரண்டு நிலையங்களுக்குப் பிறகும் நீங்கள் உங்கள் இருக்கையில் இல்லை என்றால் TTE உங்கள் இருக்கையை வேறு ஒருவருக்குக் கொடுக்க விதிகள் உள்ளன.


ரயில் தாமதமாக வந்தால்...


இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல வகையான வசதிகளை வழங்கி வருகிறது. சில நேரத்தில் ரயில் ஏதாவதொரு காரணத்தால் தாமதமாக வரலாம்.  இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நீங்கள் புக் செய்திருக்கும் ரயில் தாமதமாக வந்தால் இந்திய ரயில்வே முழுப் பணத்தையும் திருப்பித் தருகிறது, ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பயணிகள் முழு பணத்தையும் திரும்பப்பெற டிக்கெட் டெபாசிட் ரசீது அல்லது டிடிஆர் தாக்கல் செய்யப்பட வேண்டும். IRCTCன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் அல்லது டிக்கெட் கவுன்டரில் பயணிகள் TDR ஐ தாக்கல் செய்யலாம். இருப்பினும், இந்த பணத்தை திரும்ப பெற குறைந்தது 90 நாட்கள் ஆகும்.


இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ரயில் தாமதமாக வந்தால் பயணிகள் தங்களது பணத்தைத் திரும்பப் பெறலாம். எடுத்துக்காட்டாக ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தால், பயணிகள் தங்களது பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.  இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை இது போன்ற சமயங்களில் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது. ரயில் 3 மணிநேரம் தாமதமாக வந்து, அதில் பயணிக்க உங்களுக்கு விரும்பவில்லை என்னும் பட்சத்தில் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | Bank Holidays: அடுத்த வாரம் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை! முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ