அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் இந்திய விற்பனையாளர்கள் அமேசானுக்கு 3 பில்லியன் டாலர் அதாவது 300 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை டாலர்களை ஏற்றுமதி செய்துள்ளார்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Corona Virus) நெருக்கடி காலத்திலும், அமேசான் இந்தியா தனது  ஆன்லைன் தளத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் தயாரித்த 3 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளில்  விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உலகளாவிய விற்பனை திட்டத்தை 2015 இல் தொடங்கியது.
இ-காமர்ஸ் நிறுவனம் 2.5 மில்லியன் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை (MSMEs) டிஜிட்டல் மயமாக்கியுள்ளதாகவும், இதுவரை நாட்டில் சுமார்  10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது. 


ஜனவரி 2020 இல் அவர் இந்தியாவுக்கு பயணம் செய்த, ​​Amazon.com Inc. நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ், தனது நிறுவனம் இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ.களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்றும், 2025 க்குள் 10 பில்லியன், அதாவது 100 கோடி டாலர் மதிப்பிலான இந்திய தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  கூறினார். 
அமேசானின் (Amazon) உலகளாவிய விற்பனை திட்டம் மூலம் கிட்டத்தட்ட 70,000 இந்தியாவைச் சேர்ந்த விற்பனையாளர்கள் 17 சர்வதேச சந்தைகளை அடைந்துள்ளனர்


கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், அமேசான் இந்தியா ஏற்றுமதி அளவு 2 பில்லியன் டாலரை எட்டியது. “கடந்த ஆண்டு தொற்றுநோய் நெருக்கடி இருந்தாலும், தொற்றுநோய் காரணமாக டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அதிகமாக இருந்தது. இந்தியாவில் இ-காமர்ஸ் பொருளாதாரத்தை மேம்ப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


கொரோனா நெருக்கடி காலத்தில்,  வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் பலருக்கும் வாய்ப்புகளை  கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது


ALSO READ | சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்களை நாடு கடத்தலாம்: உச்ச நீதிமன்றம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR