தற்போதைய ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் இந்தியா பங்களாதேஷ் புரோட்டோகால் பாதையில் உள்நாட்டு கப்பல்களை நகர்த்த அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான அறிவிப்பில், கொரோனா தாக்கத்தை அடுத்து அமுல் படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கிற்கு மத்தியில், ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, அத்தியாவசிய பொருட்களின் எல்லை தாண்டிய எல்லை போக்குவரத்து மற்றும் ஏற்றுமதிக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


MHA-ன் பேரிடர் மேலாண்மை பிரிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு இதுகுறித்து குறிப்பிடுகையில்., "அத்தியாவசிய பொருட்களின் எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியை செயல்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது."


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தரமான இயக்க நடைமுறை (SOP) குறித்து அதன் முதன்மை ஒப்புதலை வழங்கியதால், கப்பல் அமைச்சகம் அவற்றின் முடிவில் SOP-யை வழங்கக்கூடும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


அத்தியாவசிய பொருட்களின் எல்லை தாண்டிய போக்குவரத்துக்கு நில துறைமுகங்களை இயக்க அரசாங்கம் முன்பு அனுமதித்திருந்தது.


ஏப்ரல் 15 திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில், "பெட்ரோலிய பொருட்கள் மற்றும் LPG, உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் எல்லை தாண்டிய போக்குவரத்துக்கு நில துறைமுகங்களுக்கான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்" என்று உள்துறை அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.