Bima Sugam: பீமா சுகம் வந்தாச்சு! ஒரே இடத்தில் எல்லா நிறுவனங்களின் இன்சூரஸ் பாலிசிகளும் கிடைக்கும்!
Digital initiativs Bima Sugam Insurance E-Marketplace : இந்தியாவில், காப்பீட்டை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்காக பீமா சுகம் இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வசதிகள்...
What Is Bima Sugam : காப்பீட்டு நிறுவனங்களிலும் 'UPI' முறை விரைவில் அமலுக்கு வருகிறது. இதனால் பொது மக்களுக்கு என்ன பலன்? என்பதைத் தெரிந்துக் கொள்வோம். காப்பீடு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையதாகிவிட்டது. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகனக் காப்பீடு, விபத்து காப்பீடு என சில காப்பீடுகள் பற்றி தான் பொதுமக்களுக்கு தெரிகிறது. உண்மையில் பொதுமக்கள் அறியாத பல்வேறு காப்பீடு வகைகள் உள்ளன.
இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தும் அமைப்பான, இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (Insurance Regulatory and Development Authority of India (IRDA), காப்பீட்டை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்காக பீமா சுகம் (bima sugam) என்ற இணையதளத்தை வடிவமைத்துள்ளது.
இந்த தளத்தை, ஆயுள் காப்பீட்டு கவுன்சில் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலின் ஆதரவுடன் இயங்கும். இந்த ஆன்லைன் தளம் தனிநபர்களின் அனைத்து காப்பீட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய அனுமதிக்கும், பாலிசியை வாங்குவது முதல் செட்டில்மென்ட் மற்றும் பல குறைகளையும் தீர்க்கும் காப்பீட்டுத் தளமாக இருக்கும்.
மேலும் படிக்க | உங்கள் முதலாளியிடம் மறந்தும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!
பீமா சுகம் வலைதளம்
இந்த தளத்தின் மூலம் காப்பீடு செய்வது மற்றும் காப்பீட்டு முதிர்வுத்தொகையை திரும்பப்பெறுவது, காப்பீடு தொகையை க்ளைம் செய்யும் வசதி என வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் பல்வேறு வசதிகளும் கிடைக்கும். காப்பீடு செய்திருப்பவர்களுக்கு வசதிகள் ஒரே இடத்தில் சுலபமாக கிடைக்கும். அதோடு, ஆன்லைன் விநியோகஸ்தர்களும் பீமா சுகம் தளத்தின் ஒரு பகுதியாக மாற முடியும்.
காப்பீடு செய்வது என்பது பொதுவாக ஒருவர் அடிக்கடி செய்ய வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஆயுள் காப்பீட்டைத் தவிர, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு ஆகியவை ஆண்டுதோறும் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காக பொதுமக்கள், காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று அல்லது ஏஜெண்டிடம் இருந்து பாலிசியை எடுக்க வேண்டியிருக்கிறது.
மின்னணு சந்தை உருவாக்குவதற்கான திட்டம் பீமா சுகம் என்ற பெயரில் உருவாகிறது. இது ஒருங்கிணைந்த காப்பீட்டு உள்கட்டமைப்பாக இருக்கும், பீமா சுகம் தளத்தில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தகவல்களும் எளிதாகக் கிடைக்கும். தங்கள் திட்டங்களைப் பற்றிய தகவல்கள் தரவுகளை காப்பீட்டு நிறுவனங்களே தரும்.
இன்சூரன்ஸ் துறையில் UPI போன்ற மாற்றம் உருவாகிறது
காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஒருங்கிணைந்த தளத்தை வழங்கும் 'பிமா சுகம்', வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு கணக்கு எண்களை ஒதுக்கும். இதன் மூலம் உங்கள் பாலிசியை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.
காப்பீட்டுத் துறையின் யூபிஐ பீமா சுகம்
காப்பீட்டுத் துறைக்கு இது UPI போன்ற மாற்றமாக இருக்கும். காப்பீட்டை வாங்குதல் மற்றும் விற்பது தவிர, காப்பீட்டு நிறுவனங்கள் API மூலம் இயங்குதளத்துடன் இணைப்பதன் மூலம் கோரிக்கை தொடர்பான சேவைகளையும் வழங்க முடியும்.
மேலும் படிக்க | டிராவல் இன்சூரன்ஸ் இவ்வளவு நல்லதா? இத்தனை நாள் தெரியாமா போச்சே? ப்ரீமியம் எவ்வளவு?
பீமா சுகம் நோக்கம்
ஆன்லைன் விநியோகஸ்தர்களை அகற்றுவது பீமா சுகம் என்ற தளத்தின் நோக்கம் அல்ல, அவர்களும் இந்தத் தளத்தின் ஒரு பகுதியாக மாறலாம். வாடிக்கையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், இடைத்தரகர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைத்து இன்சூரன்ஸ் பங்குதாரர்களுக்கும் இந்தச் சந்தை ஒரே ஒரு தீர்வாக செயல்படும்.
இ-காமர்ஸின் ONDC போல பீமா சுகம் இருக்கும். பீமா சுகம் மூலம் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஒரே தளத்தில் தங்கள் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்யலாம்.
பீமா சுகம் வசதிகள்
பீமா சுகம் இயங்குதளத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்படும்
வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் அதிகரிக்கும்
எங்கிருந்து வேண்டுமானாலும் காப்பீட்டு சேவைகளை பயன்படுத்தலாம்
போட்டி நிறுவனங்களின் விலைகளையும் ஒப்பிட்டுப்பார்த்து சேவையை பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர்களுக்கு இணக்கமான தளமாக இருக்கும்
பீமா சுகம் அனைத்து இன்சூரன்ஸ் பங்குதாரர்களையும் இணைத்து அதிகாரம் அளிக்கும்
மேலும் படிக்க Thangar Bachan: பாமக வேட்பாளர்கள் பட்டியல்-கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ