பிஎஃப் கணக்கில் வட்டி வரவில்லையா? காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. PF கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வரும் வட்டிப் பணம் குறித்து EPFO ட்வீட் செய்து பதிலளித்துள்ளது.
ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் 2023-24 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியது. இதற்குப் பிறகு, பிஎஃப் மீதான வட்டி 8.10-ல் இருந்து 8.15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் 6.50 கோடிக்கும் அதிகமான பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.
வட்டிப் பணம் எப்போது கணக்கில் வரும் என்று EPFO கூறியுள்ளது
அதே நேரத்தில், 2022-23 நிதியாண்டுக்கான வட்டி பணம் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படவில்லை. இது குறித்து, கணக்கு வைத்திருப்பவர்கள், எப்பொழுது வரை தங்கள் கணக்கில் வட்டிப் பணம் வரும் என்று இபிஎஃப்ஓவிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து, EPFO, கணக்கில் வட்டி பணத்தை டெபாசிட் செய்யும் செயல்முறை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் வட்டி பணம் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் தோன்றத் தொடங்கும் என்றும் மறுபதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மக்கள் பொறுமை காக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission குறித்து அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்.. உடனே தெரிஞ்சுக்கோங்க
5 மாதங்களாக வட்டிக்காக மக்கள் காத்திருக்கின்றனர்
உண்மையில், 2022-23 நிதியாண்டுக்கான வட்டித் தொகையை மார்ச் 31, 2023 வரை மட்டுமே கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் டெபாசிட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, ஆனால், கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்தும், கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வட்டிப் பணம் வரவு அனுப்படவில்லை. EPFO கணக்கில் மாதாந்திர அடிப்படையில் வட்டி வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் அது நிதியாண்டின் இறுதியில் உறுப்பினரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
EPFO சட்டத்தின்படி, ஒவ்வொரு பணியாளரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் PF ஆக டெபாசிட் செய்யப்படுகிறது. அதனுடன், அந்த நபர் பணிபுரியும் நிறுவனமும் அதற்கு 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதில் 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கிலும், மீதமுள்ள 8.33 சதவீதம் ஓய்வூதியத் திட்டத்துக்கும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
PF சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் பணம் வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும்.
இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook ஆப்ஷனை கிளிக் செய்து UAN மற்றும் password பயன்படுத்தி உங்களுக்கு PF பணம் வந்துவிட்டதா என்பதை எளிதில் பார்த்துவிடலாம்.
எஸ்எம்எஸ்: PF கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் நம்பரிலிருந்து “EPFOHO UAN TAM” என டைப் செய்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தமிழிலேயே உங்கள் பணம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். வெறும் “EPFOHO UAN”என அனுப்பினால் ஆங்கிலத்தில் விவரங்கள் வரும்.
உமாங் செயலி: இந்த செயலியில் உள்ள employee-centric services ஆப்ஷனை கிளிக் செய்து, பின்னர் view passbook ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களது UAN மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி PF பணம் வந்துவிட்டதா என்பதை எளிதில் பார்த்துவிட முடியும்.
மிஸ்டு கால்: PF கணக்கொடு இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் நம்பரிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் உங்கள் PF கணக்கில் இருக்கும் பணம், கடைசியாக வந்த பணம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வந்துவிடும்.
மேலும் படிக்க | டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த UPI Lite பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ