Indian Railways Latest Update: ஒவ்வொருவரும் இந்திய ரயில்வேயில் ஏதோ ஒரு கட்டத்தில் நிச்சயம் பயணம் செய்திருக்கிறார்கள். இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இதனால் தான் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக ரயில்வேயில் பயணிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ரயில்வேக்கு மிக முக்கியமான காரணியாகும். இருப்பினும், ஒடிசாவின் பாலசோரில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்து விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்துகிறது. ரயிலில் பயணம் செய்யும் போது, ரயில் திடீரென வேகம் குறைவதையோ அல்லது ரயில் நின்று விடுவதையோ நீங்கள் உணரலாம். உங்கள் ரயில் சென்றுகொண்டிருக்கும் பாதையின் அருகில் ரயில் நிலையங்கள் இல்லாவிட்டாலும் இது நடக்கும்.


ஒரே தண்டவாளப் பாதையில் ஓடும் ரயில்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இரண்டு ரயில்களுக்கு இடையே 6 முதல் 8 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது. ஒரு ரயில் ஒரு நிலையத்தை விட்டு மற்றொரு நிலையத்தை அடையும் போது, ஸ்டேஷன் மாஸ்டர் அடுத்த நிலையத்தின் பொறுப்பாளரை தொடர்பு கொண்டு தகவலை பரிமாறிகிறார். அந்த ரயில் செல்லும் தண்டவாளத்தில் வேறு ரயில் சென்றுகொண்டிருந்தால், பின்னாடி வரும் ரயிலின் வேகம் அதற்கேற்ப குறைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு.. இனி அசைவ உணவு கிடைக்குமா? கிடைக்காது


தானியங்கி பிளாக் ஒர்க்கிங் சிஸ்டம் 


இதேபோல், இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூரம் அதிகமாக இருக்கும்போது பின்னாடி இருக்கும் ரயில் வருவதற்கு முன், ஒரு ரயில் புறப்படுவதற்கு போதுமான நேரம் கிடைக்கும். இது தானாக இரண்டு ரயில்களுக்கு இடையே அதிக இடைவெளியை உருவாக்குகிறது. பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, ரயில்வே தானியங்கி பிளாக் ஒர்க்கிங் சிஸ்டம் (Automatic Block Working System) அமல்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம், ஒரே தண்டவாளத்தில் செல்லும் ரயில்களுக்கு இடையே உள்ள தூரத்தை பராமரிப்பதில் மனித தலையீட்டின் தேவையை குறைத்து, ஆட்டோமேட்டிக் முறையை கைக்கொள்கிறது. தண்டவாளத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள சிக்னல் பெட்டிகள் சிக்னல்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஒரு ரயில் சிக்னலைக் கடந்தவுடன், அடுத்த ரயிலை எச்சரிக்க சிவப்பு நிறமாக மாறும்.


சிக்னல்கள்


இதற்குப் பிறகு, ரயில் அடுத்த சிக்னலுக்குச் சென்றவுடன், முந்தைய சிக்னல் மஞ்சள் நிறமாக மாறும். ரயில் மூன்றாவது சிக்னலைக் கடக்கும்போது, இரண்டாவது ரயில் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் வரலாம் என்பதை இரண்டு மஞ்சள் விளக்குகள் குறிப்பிடுகின்றன. லோகோமோட்டிவ் பைலட் என்றழைக்கப்படும் ரயிலை இயக்கும் நபர் இந்த சிக்னல்களை கவனமாகப் பார்க்கிறார். பச்சை சிக்னல் முன்னோக்கி நகர்வதைக் குறிக்கிறது. அதே நேரத்தில், சிவப்பு சிக்னல் முன்னால் உள்ள தண்டவாளங்கள் ரயிலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதையும், ரயில் வெகு தொலைவில் இல்லை என்பதையும் குறிக்கிறது. இந்நிலையில், லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைப்பார்.


இந்த பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்துவதன் மூலமும், தானியங்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும், இந்திய ரயில்வே தனது விரிவான நெட்வொர்க்கில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறது. ஒடிசா ரயில் விபத்தில் சுமார் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், இத்தகைய பாதுகாப்பு முறைகள் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 


மேலும் படிக்க | இனி ரூம் எடுக்க 50 ரூபாய் இருந்தால் போதும், ரயில்வே புதிய வசதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ