ATF மீதான கலால் வரி: வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சர்வதேச விமானங்களில் பயணம் செய்வது இப்போது எளிதாகும். உண்மையில், நிதி அமைச்சகம் சர்வதேச விமானங்களை இயக்கும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விமான எரிபொருளை அதாவது ATF (Aviation Turbine Fuel) என்னும் ஜெட் எரிபொருளை சந்தைப்படுத்தும் நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்கு 11 சதவீத அடிப்படை கலால் வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதாவது, இப்போது ATF மீது இனி கலால் வரி விதிக்கப்படாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்கம் வழங்கிய தகவல்


சர்வதேச விமானங்களை இயக்குவதற்காக உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விற்கப்படும் ATF மீது அடிப்படை கலால் வரி விதிக்கப்படாது என்று அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.


ATF மீதான கூடுதல் கலால் வரி 


முன்னதாக ஜூலை 1ஆம் தேதி, விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.6 வீதம் சிறப்பு கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சர்வதேச விமானங்களை இயக்கும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்தக் கட்டணம் பொருந்துமா என்பது சந்தேகம் எழுந்தது. ஆனால், இப்போது அரசாங்கம் இதனை தெளிவு படுத்தியுள்ளது. இந்த முடிவை, விமான சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் வரவேற்று உள்ளன.


மேலும் படிக்க | ITR Filing முக்கிய அப்டேட்: இந்த தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அதிக அபராதம்


முன்னதாக ATF ஏற்றுமதிகளுக்கு கலால் வரி விதிக்கப்பட்ட பின்னர், சர்வதேச விமானங்களைக் கொண்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் 11 சதவீத அடிப்படை கலால் வரியை செலுத்த வேண்டும் என்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால் உள்நாட்டு விமான நிறுவனங்கள் இயக்கும் சர்வதேச விமானங்களுக்கு இந்த கலால் வரி பொருந்தாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 


அரசின் இந்த முடிவால் விமானத் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கே.பி.எம்.ஜி., வரி பார்ட்னர் அபிஷேக் ஜெயின் கூறுகையில், “வெளிநாடு செல்லும் விமானங்களின் எரிபொருளுக்கு கலால் வரி விதிக்கப்படும் நிலையில், அரசு உள்நாட்டு விமான நிறுவனக்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இது விமானத் துறைக்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்” என நம்பிக்கை வெளியிட்டார்.


மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR