சுனாமி போன்ற அலையில் ஸ்விம்மிங்கை போடும் மக்கள்..பயமே இல்லையா? வைரல் வீடியோ..

Viral Video Of People Swimming In Tsunami Waves : மக்கள் சிலர், பெரிய அலையில் கூலாக ஸ்விம்மிங் செய்யும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Sep 21, 2024, 06:22 PM IST
  • சுனாமியில் ஸ்விம்மிங் போடும் மக்கள்!
  • பயமே இல்லையா?
  • பயமுறுத்தும் வைரல் வீடியோ!!
சுனாமி போன்ற அலையில் ஸ்விம்மிங்கை போடும் மக்கள்..பயமே இல்லையா? வைரல் வீடியோ.. title=

Viral Video Of People Swimming In Tsunami Waves : மக்களை பார்த்தவுடன் பதற வைக்கும் பல விஷயங்கள் இந்த உலகில் இருக்கிறது. அதில் ஒன்று, சுனாமி. மிரள வைக்கும் இந்த அலைகளை பார்த்தவுடன் அனைவருக்கும் பயந்து ஓடத்தான் தோன்றும். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சில இளைஞர்கள் பெரிய அலையை பார்த்து துளி கூட பயமே இல்லாமல் நீச்சலடிக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் விடியோ:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிலர் கடலில் நீச்சலடித்து ஜாலியாக அனந்த குளியல் போட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களை நோக்கி ஒரு பெரிய அலை வருகிறது. இந்த அலையை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் கத்துகின்றனர். பயத்தினால் அல்ல, சந்தோஷத்தினால். 

மேலும் படிக்க | நாகப்பாம்பே கன்பியூஸ் ஆகும் அளவிற்கு பாசம் காட்டிய குடிமகன்: அலறிய நெட்டிசன்ஸ்.. வைரல் வீடியோ

அந்த அலை அவர்களை நோக்கி வர, பின்பு ஒரவர் அதன் மீது சர்ஃபிங் செய்கிறார். இன்னும் சிலர் அதிலே நீச்சல் அடிக்கின்றனர். இது சுனாமி அளவிற்கு பெரிய அலை இல்லை என்றாலும், ஓரளவிற்கு பெரிய அலைதான். இதே போல வைரலாகி வரும் இன்னொரு வீடியோவில், உண்மையாகவே அந்த அலை பார்ப்பதற்கு சுனாமி போல இருக்கிறது. அதிலும் ஒருவர் கூலாக சர்ஃபிங் செய்கிறார். அதை கடற்கரையில் இருப்பவர்கள் “ஆவென” வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுனாமியில் நீச்சலடிக்க முடியுமா? 

சுனாமி அலைகளில் நீச்சலடிப்பது என்பது முடியவே முடியாத காரியமாகும். எவ்வளவுதான் நீச்சலில் கற்றுத்தேர்ந்த வீரராக இருந்தாலும் சரி, அவரால் சுனாமியில் நிச்சலடிக்கவே முடியாதாம். இது மிகவும் ஆபத்தானது என்றும், இதை யாரும் செய்யாக்கூடாது என்றும் பலர் எச்சரிக்கின்றனர். சுனாமி அலைகள், மிகவும் வேகமாக மற்றும் பெரிதாக அடிக்கும் அலைகளாக இருக்கும். ஆழ்கடலில் ஏற்படும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் என கூறப்படுகிறது. 

சுனாமி பாதிக்கும் இடங்களில் இருப்பவர்கள், ஆபத்து நேரங்களில் தாழ்வான பகுதிகளை விடுத்து, உயர்வான இடங்களுக்கு சென்று, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் படிக்க | யானைக்கும் யானைக்கும் சண்டை தசரா கொண்டாட்டத்தில் நடந்த மோதல் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News