வருங்காலத்தில் ஏற்படும் நிதி சிக்கல்களை தவிர்க்கவும், கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கிலும் பலரும் பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.  உங்களுக்கு சிறந்த வருமானத்தையும், பணத்திற்கு பாதுகாப்பையும் தர போஸ்ட் ஆபிசின் திட்டம் ஒன்றுள்ளது.  கிராம் சுமங்கல் எனப்படும் இந்த திட்டம் எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது, இது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வகையின் கீழ் வருகிறது.  கிராம் சுமங்கல் திட்டத்திற்கான அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.  இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட நபர் இறந்தால், நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் போனஸ் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை



இந்த திட்டத்தில் பங்களிக்க முதலீட்டாளருக்கு குறைந்தபட்சமாக 19 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுகள் வரை இருக்கவேண்டும், இந்தத் திட்டத்தின் பாலிசி காலம் மொத்தம் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள். பாலிசிதாரர் 15 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால், அவர் 6, 9 மற்றும் 12 ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையில் 20-20 சதவீதம் பெறுவார்.  பாலிசியின் முதிர்ச்சியின் போது, ​​சம் அஷ்யூர்டு மற்றும் மொத்த போனஸில் 40 சதவீதம் அவருக்கு மொத்தமாக கிடைக்கும்.  20 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால்  8, 12 மற்றும் 16வது ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையில் 20-20 சதவீதத்தைப் பாலிசிதாரர் பெறுவார்.  20 ஆண்டுகள் நிறைவடைந்ததும், மொத்த போனஸுடன் காப்பீட்டுத் தொகையில் 40 சதவீதம் கிடைக்கும்.


இந்த திட்டத்தில் ரூ.1 லட்சத்திற்கான வருடாந்திர போனஸ் ரூ.4500 ஆக இருக்கும்.  உதாரணமாக 25 வயதில், 15 ஆண்டு காலத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையை வாங்குகிறீர்கள் என்றால் நிகர மாதாந்திர பிரீமியம் ரூ.6793 ஆக இருக்கும் மற்றும் பாலிசி காலத்தை 20 ஆண்டுகள் தேர்ந்தெடுத்தால் மாத பிரீமியம் ரூ.5121 ஆக இருக்கும்.  15 வருட பிரீமியத்திற்கான போனஸ் ரூ.6.75 லட்சம் மற்றும் 20 வருட பிரீமியத்திற்கான போனஸ் ரூ.9 லட்சம் ஆகும்.  காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்றால் 15 ஆண்டுக கால முதிர்வுக்கு பிறகு ரூ.16.75 லட்சம் கிடைக்கும் அதுவே 20 ஆண்டுகால முதிர்வுக்கு பிறகு ரூ.19 லட்சம் கிடைக்கும்.


மேலும் படிக்க | வீட்டுக்கடன் எளிதில் பெற இந்த முறையை பாலோ பண்ணுங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ