Retirement Planning Tips:  ஓய்வூதிய திட்டமிடல் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. எவ்வளவு சீக்கிரம் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் ஓய்வூதியத் தொகை பெரிதாக இருக்கும். பெரும்பாலான சம்பளக்காரர்கள் ஓய்வூதியத் திட்டமிடல் பற்றி அதிக சிந்திப்பதில்லை. ஆனால், அதற்கான திட்டமிடல் மிகவும் முக்கியமானது. பெரும்பாலானோர் இதைப் பற்றி முதலில் 30 முதல் 40 வயதில் நினைக்க தொடங்குகிறார்கள். ஆனால் இந்த வயதில் முதலீடு செய்து பெரிய நிதியை உருவாக்குவது கடினம். எனவே, உங்கள் வாழ்க்கையின் முதல் சம்பளத்தைப் பெற்றவுடன், நீங்கள் ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி யோசித்து முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் தொடங்காலாம் என ஒத்தி போடுவதை தவிர்க்கவும்


25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஓய்வுபெறும் திட்டத்தை பிறகு தொடங்கலாம் என தள்ளிப் போடுகிறார்கள். ஆனால் எவ்வளவு விரைவில் முதலீடு தொடங்கப்படுகிறதோ, அவ்வளவு பெரிய அளவில் நிதியை உருவாக்க முடியும். நீங்கள் ஊதியத்தை சிறப்பாக சேமிக்க திட்டமிட்டால், 30 முதல் 40 வயதிற்குட்பட்டவராகவும் இருந்தால், 60 வயதை அடையும் போது, ​​நீங்கள் 10 கோடி ரூபாய் அளவிற்கு நிதியை குவிக்கலாம். நீங்கள் 30 வயதாக இருந்தால், முதலீடு செய்ய இன்னும் 30 வருடங்கள் உள்ளன. உங்களுக்கு 40 வயது என்றால், முதலீடு செய்ய இன்னும் 20 வருடங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.


சொத்து ஒதுக்கீடு முக்கியமானது


உங்கள் முதலீட்டின் வருமானம் (Investment Tips), நீங்கள் எப்படி எந்த வகையான முதலீடுகளுக்காக ஒதுக்கீடு செய்தீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும். உங்கள் போர்ட்ஃபோலியோ வருமானத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நீங்கள் கடன் பத்திரங்களில் அதிக ஒதுக்கீடு செய்திருந்தால், வருமானம் குறைவாக இருக்கும். அதே சமயம், சரியான வகையிலான ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் ஈக்விட்டியில் அதிக ஒதுக்கீடு செய்திருந்தால், வருமானம் அதிகமாக இருக்கும். உங்கள் வயது மற்றும் உங்கள் முதலீட்டு பாணியைப் பொறுத்து, நீங்கள் ரூ. 10 கோடி என்ற இலக்குக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1.7 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும்.


மேலும் படிக்க| பணத்தை பன்மடங்காக்கும் ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்!


60 வயதில் 10 கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியைப் பெற எந்த வயதிலிருந்து எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்


30 வயதில் தொடங்கும் சேமிப்பு பழக்கம்


நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்காமல், டெப்ட் திட்டங்களில் அதிக முதலீடு செய்தால், உங்கள் சராசரி வருமானம் 8 சதவீதமாக இருக்கும். இதன்படி மாதம் ரூ.68 - 69 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் சமச்சீர் முதலீட்டாளராக இருந்தால், ஈக்விட்டி மற்றும் கடனில் சமமாக முதலீடு செய்தால், உங்கள் சராசரி வருமானம் சுமார் 10 சதவீதமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மாதம் 46-47 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் முக்கியமாக பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு தீவிரமான முதலீட்டாளராக இருந்தால், உங்கள் சராசரி வருமானம் 12 சதவீதத்திற்கு அருகில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மாதம் 30-31 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.


35 வயதில் தொடங்கும் சேமிப்பு பழக்கம்


நீங்கள் ஒரு பழமைவாத முதலீட்டாளராக இருந்தால், நீங்கள் ரூ 1 முதல் 1.1 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் சமச்சீர் முதலீட்டாளராக இருந்தால் மாதம் ரூ.77-78 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். அதேசமயம், நீங்கள் தீவிரமான முதலீட்டாளராக இருந்தால் மாதம் ரூ.55-56 ஆயிரம் வரை முதலீடு செய்ய வேண்டும்.


40 வயதில் தொடங்கும் சேமிப்பு பழக்கம்


நீங்கள் ஒரு பழமைவாத முதலீட்டாளராக இருந்தால், நீங்கள் ரூ 1.6 முதல் 1.7 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் சமச்சீர் முதலீட்டாளராக இருந்தால், மாதத்திற்கு ரூ.1.3-1.4 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதேசமயம், நீங்கள் ஒரு தீவிரமான முதலீட்டாளராக இருந்தால், நீங்கள் மாதத்திற்கு ரூ.1-1.1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ