செப்..5 வரை ப.சிதம்பரம் திகார் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்: உச்சநீதிமன்றம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தவிட்டது உச்சநீதிமன்றம்.
புதுடெல்லி: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டாம். அவரை திகார் சிறைக்கு அனுப்பி விடுங்கள் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டதுக்கு, அவர் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை திகார் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவரின் சிபிஐ காவலை மேலும் இரண்டு நாள் நீடித்து உத்தரவிட்டது.
INX மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உதவி செய்ததாகவும் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் இருந்து சி.பி.ஐ. கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் கிடைக்கததால் கடந்த மாதம் 21 ஆம் தேதி இரவு ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. மறுநாள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி கிடைத்தது. அதன்பிறகு 4 நாட்கள்,மீண்டும் 2 நாட்கள் என காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடையும் நிலையில், CBI காவலுக்கு எதிரான மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதாகவும், அதனால் அவரை திகார் சிறையில் அடைக்க வேண்டாம். வீட்டுக்காவலுக்கு அவர் தயாராக இருப்பதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ப.சிதம்பரத்தை வரும் செப்.,5 ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால் சி.பி.ஐ. காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று உச்சநீமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நாளையுடன் ப.சிதம்பரத்தின் 15 நாள் காவல் முடிவைடைய உள்ளது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டாம். அவரை திகார் சிறைக்கு அனுப்பி விடுங்கள். ஏனென்றால் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறினார். இதற்கு பதில் அளித்த சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபல், இது குறித்து நாங்கள் நீதிமன்றத்திற்கு அறிவித்துவிட்டோம் என்று கூறினார்.
இதனையடுத்து செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது 5 ஆம் தேதி வரை சிதம்பரம் திகார் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.