இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ.2000 பிங்க் நோட்டுகள் குறித்த பெரிய முடிவை எடுத்து அவற்றை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இருப்பினும், 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும், மற்ற மதிப்புள்ள நோட்டுகளுக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெளிவாக கூறியுள்ளது. இதற்கான தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக மக்கள் மனதில் பல கேள்விகள் உலா வருகின்றன. இதில் ஒன்று வங்கி கணக்கு இல்லாதவர்கள், எப்படி 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரிமாற்றம் எளிதாக செய்ய முடியும்


2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 வரை புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், வங்கியில் இருந்து மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது, வங்கிகள் இனி புதிய 2000 நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்காது.


மேலும் படிக்க | Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்?


நோட்டுகளை மாற்ற வங்கி கணக்கு தேவையா?


நாட்டில் உள்ள எந்த வங்கியின் கிளையிலிருந்தும் ஒருவர் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெளிவாக கூறியுள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், எந்த வாடிக்கையாளரும் அவர் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியில் இருந்து 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியுமா?  என்பது தான். அதற்கான பதில், வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நோட்டுகளை மாற்றும் வசதி அனைத்து வங்கிகளிலும் மேற்கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


நோட்டு பரிமாற்ற வரம்பு


20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் ஒரே நேரத்தில் மாற்றப்படாது. நோட்டுக் கொள்கையின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்கையின்படி, RBI படிப்படியாக சந்தையில் இருந்து 2000 நோட்டுகளை திரும்பப் பெறும். தற்போது ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிவர்த்தனை மிகவும் குறைவாக உள்ளது.


ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வங்கிகளில் 2000 நோட்டுகளை மாற்ற தனி சிறப்பு கவுண்டர்கள் இருக்கும். அங்கு நீங்கள் எளிதாக 2000 நோட்டுகளை மாற்ற முடியும். காலக்கெடு முடிந்ததும் இவற்றை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30க்கு பிறகு ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது.


அச்சிடுதல் நிறுத்தப்பட்டது


2018-19 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 2016 நவம்பரில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன.


மேலும் படிக்க | 2000 Rupee Note: வங்கியை தவிர வேறு எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ