Fuel vs GST: பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வருமா? வந்தால் அதன் தாக்கம் என்ன?
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால், அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விகள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்கப்பட்டன
புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax) வரம்பிற்குள் பெட்ரோல்-டீசலை கொண்டுவந்து அவற்றின் விலையை உயர்த்துவது கொண்டுவர அரசாங்கம் பரிசீலிக்கிறதா? இந்த கேள்வி மீண்டும் ஒரு முறை எழுந்துள்ளது.
இன்று கூடிய மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள். இது தவிர, சமையல் எண்ணெய்களின் விலைகள் குறித்தும் மக்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலைக் கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றதா என்று நாடாளுமன்ற கீழவையில் அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால், அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
ALSO READ | 7th Pay Commission: டி.ஏ உயர்வையடுத்து ஊழியர்களுக்கு கிடைத்த மற்றொரு பம்பர் பரிசு
பெட்ரோல்-டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றதா என்றும் இது தொடர்பாக மாநிலங்களுடன் ஏதேனும் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதா என்றும் அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சேர்க்க ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரை தேவைப்படும் என்று தெரிவித்தார். மாநிலங்களும் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் வரம்பின் கீழ் கொண்டுவருவது குறித்து பல கோரிக்கைகள் எழுந்துள்ளன என்றார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 44 வது கூட்டம் 2021 ஜூன் 12 அன்று நடைபெற்றது.
ஜி.எஸ்.டி வரம்பிற்குள் பெட்ரோல் மற்றும் டீசலைக் கொண்டுவருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் பரிசீலிக்கும் என்றும், வருவாயைக் கருத்தில் கொண்டு அதை பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ALSO READ | Pegasus Spyware-ன் இலக்கில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள்
இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலில் அத்தகைய திட்டம் எதுவும் விவாதிக்கப்படவில்லை, எல்பிஜியைப் பொருத்தவரை, இது ஏற்கனவே ஜிஎஸ்டியின் கீழ் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் எல்லைக்குள் கொண்டுவருவதற்கான திட்டத்தை மாநில அரசுகள் கொண்டு வந்தால், மத்திய அரசு அதை பரிசீலிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் முன்னரே தெரிவித்திருந்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் தவிர, சமையல் எண்ணெயின் விலையை குறைப்பது தொடர்பாகவும் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது.
சமையல் எண்ணெய்களுக்கான வரியைக் குறைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2021 ஜூன் 30 அன்று கச்சா பாமாயில் மீதான சுங்க வரி 35.75 சதவீதத்திலிருந்து 30.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான வரி 49.5% இலிருந்து 41.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட விகிதம் செப்டம்பர் 30, 2021 வரை பொருந்தும் என்று தெரிவித்தார்.
ALSO READ | சாதாரண மக்கள் அமைச்சர்களாவதை எதிர் கட்சிகளால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை: PM Modi
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR