சரக்கு வருவாயை அதிகரிப்பதற்காக `Pizza Delivery` மாதிரியை ஏற்கும் இந்தியன் ரயில்வே!! இது சாத்தியமா?
சரக்கு வருவாயை அதிகரிப்பதற்காக ரயில்வே Dominoவின் Pizza delivery மாதிரியை ஏற்றுக் கொள்ளலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது சாத்தியமானதா?
புதுடில்லி: சரக்கு வருவாயை உயர்த்துவதற்கான முயற்சியில், இந்திய ரயில்வே ஒரு புதுமையான மாதிரியைத் தயாரிக்கிறது, இது பொருள் அல்லது சரக்குகளை சரியான நேரத்திற்கு வழங்குவதை உறுதிப்படுத்தும்.
சரக்கு வருவாயை அதிகரிப்பதற்காக ரயில்வே Dominoவின் Pizza delivery மாதிரியை ஏற்றுக் கொள்ளலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. அதாவது, நாட்டின் முக்கியமான பொருள் போக்குவரத்திற்கான ஆதாரமான ரயில்வே, குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருட்கள் உரிய இடத்தை சென்றடைவதை நேரத்தை வழங்குவதை உறுதி செய்யும், அதோடு தாமதம் ஏற்பட்டால், ரயில்வே அதற்கு போதுமான இழப்பீடு வழங்கும்.
இழப்பீட்டு மாதிரியானது மணிநேர அடிப்படையில் இருக்கும், அதாவது பொருட்களை வழங்குவதற்கான குறிப்பிட்ட கால அவகாசத்தை ரயில்வே பொருட்களை வாங்கும் போதே தெரிவித்துவிடும். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும்.
உதாரணமாக மும்பையில் இருந்து பொருட்கள் டெல்லிக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் அதிகபட்சம் 3 நாட்கள் (72 மணி நேரம்) ஆகும். அந்த 72 மணி நேரத்திற்குள் பொருட்கள் வழங்கப்படாவிட்டால், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு காலாவதியான பிறகு, தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரயில்வே இழப்பீடு வழங்கும்.
இந்த யோசனையை முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது குழுவிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இது ரயில்வேக்கு வருவாய் ஈட்டுவதில் சிறப்பான பயனைக் கொடுக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன.
எஃகு, நிலக்கரி, இரும்புத் தாது, சிமென்ட் நிறுவனங்கள் தங்கள் விருப்பமான போக்குவரத்து முறைக்கு ரயில்வேயைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்கள், ஆட்டோ செக்டர் மற்றும் மருந்துத் துறை ஆகியவற்றை தனது சரக்கு விநியோக சேவைகளை நோக்கி ஈர்ப்பதே இந்திய ரயில்வேயின் நோக்கமாக இருக்கிறது.
Also Read | வங்க தேச துறைமுகம் வழியாக முதல் சரக்கு கப்பல்… புதிய வர்த்தக மையமாக மாறும் திரிபுரா…!!!
சரக்குகளை கொண்டு சேர்க்கும் முயற்சிகளை இந்திய ரயில்வே விரிவுபடுத்தியுள்ளது, இது நாட்டின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை சுலபமாக கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும். முதல் கட்டமாக, ஆகஸ்ட் 15 அன்று 5 பார்சல் வேன்களில் அசாமின் அசாரா நிலையத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் நஹர்லாகுனுக்கு பெப்சி பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டன.
நாட்டில் பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்தாக வியாபாரிகள் இந்திய ரயில்வேயைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக இந்திய ரயில்வே தொடர்ச்சியாக பல சலுகைகளை அறிவித்துள்ளது. முதலில் 'Pizza Delivery' மாதிரியை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மாதிரியை செயல்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.