ITR 2022 Filing Last Date: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
ITR 2022 Filing Last Date: நீங்கள் வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? இது குறித்த ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. இதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
புது தில்லி: கடந்த நிதியாண்டிற்கான (2021-22) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வரும் நிலையில், இதுவரை 10 சதவீத வரி செலுத்துவோர் மட்டுமே தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், வருமான வரித்துறை ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கக்கூடும் என்ற ஊகங்கள் உள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, வருமான வரித் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல நிபுணர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மீண்டும் வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டும் நீட்டிக்கப்படும் என்று ஊகித்து வருகின்றனர்.
தற்போது, வருமான வரித்துறை இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2022-ஐ கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், தொற்றுநோய் தவிர, வருமான வரி தாக்கல் செய்யும் ஆன்லைன் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
வருமான வரித்துறை கூறியது என்ன?
வருமான வரித்துறை, ஜூலை 2 அன்று ஒரு ட்வீட்டில், இன்ஃபோசிஸ் உருவாக்கிய புதிய மென்பொருளில் உள்ள சில கோளாறுகள் காரணமாக, வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தைத் தொடர்ந்து தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும், போர்ட்டலில் வரும் இந்த சிக்கல்களைச் சமாளிக்க நிறுவனம் முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியது. சில வரி செலுத்துவோர் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலை அணுகுவதில் சிக்கலை எதிர்கொள்வதைக் காண முடிந்தது என்றும் வருமான வரித் துறை மேலும் தெரிவித்தது.
போர்ட்டலில் ஏற்படும் ஒழுங்கற்ற போக்குவரத்து தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக இன்ஃபோசிஸ் தெரிவித்தது. அத்தகைய சூழ்நிலையில், சில பயனர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்றும், இந்த அசவுகரியத்துக்காக தாங்கள் வருந்துவதாகவும் நிறுவனம் கூறியது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
வருமான வரித்துறை அதன் சமீபத்திய ட்வீட்டில் போர்டல் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதனுடன் இணையதளம் மெதுவாக இயங்குவது குறித்தும் பேசப்படுகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வருமான வரித்துறை தயாராகி வருவதாக ஊகங்கள் எழுந்துள்ளதாக வருமான வரித்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, புதிய வருமான வரி போர்ட்டல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்துவிட்டதாகவும், இப்போது வரை போக்குவரத்தை முழுமையாகக் கையாளும் திறன் அந்த போர்டலுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை விரைவில் தாக்கல் செய்ய விரும்புவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஐடிஆர் தாக்கல் இன்னும் இலக்கை விட மிகவும் பின்தங்கியுள்ளது
ஜூலை முதல் வாரத்திற்கான தரவுகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. முதல் வாரம் வரை 99.20 லட்சம் பேர் மட்டுமே ரிட்டன்களை தாக்கல் செய்துள்ளனர். இது ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் 7.5 கோடி மதிப்பீட்டை விட மிகவும் பின்தங்கியிருக்கிறது. போர்ட்டலில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால், மீதமுள்ள 21 நாட்களில், சுமார் 6.5 கோடி வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்வது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த மதிப்பீட்டு ஆண்டின் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை வருமான வரித் துறை மார்ச் 15 வரை நீட்டித்தது. இவ்வாறான நிலையில் இம்முறை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை வருமான வரித் துறை குறைந்தபட்சம் 1 மாத காலம் நீடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. போர்ட்டலில் தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதையும் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணம் உட்பட, கடந்த 11 முறைகளில் 8 முறை காலக்கெடுவை வருமான வரித் துறை நீட்டித்துள்ளதால் இம்முறையும் கடைசி தேதி நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ