Corona Virus may persist 1 month in Fridge: கோவிட்-19-ஐ உண்டாக்கும் SARS-CoV-2 வைரஸ், இறைச்சி மற்றும் மீன் பொருட்களில் ஃப்ரிட்ஜ் அல்லது ஃப்ரீசரில் 30 நாட்கள் வரை உயிர் வாழும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
Applied and Environmental Microbiology என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கோழி, மாட்டிறைச்சி, பன்றி மற்றும் மீன் ஆகியவற்றில் SARS-CoV-2 தொடர்பான சோதனைகளை மேற்கொண்டது.
உங்கள் வீட்டில் யாராவது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அதற்கு நமது ஃப்ரீசரும் காரணமாக இருக்கலாம் என்று கருதும் வாய்ப்பை இந்த ஆய்வு ஏற்படுத்துகிறது.
சமீபத்திய ஆய்வின்படி, SARS-CoV-2 வைரஸ், உறைந்த மீன் மற்றும் பன்றி இறைச்சியில் 30 நாட்கள் வரை வாழலாம் இறைச்சி வைரஸின் ஆதாரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | CoVarScan: கொரோனாவின் அனைத்து பிறழ்வுகளையும் கண்டறியும் புதிய சோதனை
ஆராய்ச்சி முடிவுகள் ஜூன் 11 அன்று அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி இதழில் அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜியில் வெளியிடப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் இறைச்சி மற்றும் மீன் பொருட்களை குளிர்பதனம் (4 டிகிரி செல்சியஸ்) மற்றும் ப்ரீஸர் வெப்பநிலை (மைனஸ் 20 டிகிரி C) ஆகிய இரண்டிலும் சேமித்து வைத்தனர்.
ஆராய்ச்சியின் முதன்மை பொறுப்பாளர் எமிலி எஸ். பெய்லி, அமெரிக்காவில் உள்ள கேம்ப்பெல் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.
மேலும் படிக்க | வந்துவிட்டதா நான்காவது அலை; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்
இறைச்சியை 30 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்க முடியாது, ஆனால் நீங்கள் அதை நீண்ட காலத்திற்கு ஃப்ரீசரில் சேமிக்கலாம் என்பதால் பிரிட்ஜை விட ஃபிரீசரில் வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறது.
எனவே, ஃப்ரிட்ஜில் இருப்பதைவிட, ஃப்ரீஸரில் வைரஸ்கள் வளரும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்று பெய்லி கூறுகிறார்.
தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் கொரோனா வைரஸ் வளர்வதற்கான இடம் எது என்பது தொடர்பான ஆய்வை நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
மேலும் படிக்க | கொரோனாவினால் எதிர்காலம் இருண்டு போன சீன மாணவர்கள்
இந்த ஆய்வு முக்கியமானது, ஏனெனில் SARS-CoV-2 சுவாசக் குழாயில் மட்டுமல்ல, வயிற்றிலும் பெருகும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெய்லி கருதுகிறார்.
லிப்பிட் உறை கொண்ட ஒரு ஆர்என்ஏ வைரஸ் (RNA virus with a lipid envelop), இரண்டு விலங்கு கொரோனா வைரஸ்கள், முரைன் ஹெபடைடிஸ் வைரஸ் மற்றும் டிரான்ஸ்மிசிபிள் காஸ்ட்ரோஎன்டெரிடிஸ் வைரஸ் ஆகியவை இந்த ஆய்வில் பினாமிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
மூன்று வைரஸ்களும் கடந்த காலத்தில் SARS-CoV-2 இன் நிலைப்பாட்டில் பயன்படுத்தப்பட்டன, குளிர்பதன வெப்பநிலையில் இருக்கும் வைரஸின் வளர்ச்சியைவிட, ஃப்ரீஸரின் வெப்பநிலையில் வைரஸ்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றன.
நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தப்படும் உணவுகளின் வகையைப் பொறுத்து, வைரஸின் தாக்கம் மக்களை பாதிக்கும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
மேலும் படிக்க | UPI பேமெண்ட் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata