ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டிக்குமா? வெளியானது புதிய ட்வீட்
ITR Filing Last Date: இன்று அதாவது ஜூலை 31 ஆம் தேதி 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி தேதியாகும்.
2021-22 நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்று வந்துவிட்டது. வரி செலுத்துவோர் ஐடிஆர் ஐ இன்று அதாவது 31 ஜூலை 2022 வரை தாக்கல் செய்யலாம். நீங்கள் இதுவரை ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதத்தைத் தவிர்க்க இன்றே ஐடிஆர் தாக்கல் செய்து முடிக்கவும். மேலும் தற்போது வரை சுமார் 5 கோடிக்கும் அதிகமானோர் ஐடிஆர் ரிட்டன்ஸ் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில் 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது ஜூன் 15, 2022 முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில் 30 ஜூலை 2022க்குள் சுமார் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரி இந்தியா சார்பாக ட்வீட் செய்து கூறப்பட்டுள்ளது. மேலும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஐடிஆர் ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். நீங்கள் இதுவரை உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், உடனடியாகச் செய்து, தாமதக் கட்டணத்தைத் தவிர்க்கவும். எனவே உங்கள் அலுவலகத்தில் படிவம்-16 கிடைத்திருந்தால், தாமதமின்றி அதை நிரப்பவும். காலக்கெடுவிற்கு முன் நீங்கள் அதை நிரப்பவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த நிலையில் ஐடிஆர் தாக்கல் செய்ய இன்று கடைசி தேதி, அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இதனால் நாடு முழுவதும் ஆய்கார் சேவா கேந்திராக்களை திறக்க வருமான வரித்துறையின் ஒழுங்குமுறை அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) உத்தரவிட்டுள்ளது. இ-ஃபைலிங் போர்டல் தொடர்பான பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்துடன் வரி செலுத்துவோரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.
நாளை முதல் அபராதம் விதிக்கப்படும்
அத்துடன் ஜூலை 31க்குப் பிறகும் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியும் என்றாலும், வரி செலுத்துவோர் அவ்வாறு செய்வதற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அபராதத் தொகையைப் பற்றி பேசுகையில், ஒருவரின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர் ரூ. 5000 அபராதம் செலுத்த வேண்டும், இது தவிர, ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் இருந்தால், அவர் 1000 அபராதம் செலுத்த வேண்டும்.
இன்றுக்குள் ரிட்டனைத் தாக்கல் செய்யுங்கள்
2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாமதக் கட்டணம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 என்பது குறிப்பிடத்தக்கது. காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், நீங்கள் வரி மீதான வட்டியுடன் சேர்த்து 234A பிரிவின் கீழ் மற்றும் வருமான வரியின் 234F பிரிவின் கீழ் அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | ITR Filing Update: ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ