ITR Filing: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? வங்கிகளின் இந்த பட்டியல் உங்களுக்கு அவசியம்!!
ITR Filing: வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 28 வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தொகையை செலுத்தலாம்.
ITR Filing: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வருகின்றது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான ஆயத்தப்பணிகளை வருமான வரி செலுத்துவோர் செய்து வருகிறார்கள். வரி செலுத்துவோர் ஆன்லைனில் இ-ஃபைலிங் போர்டல் மூலம் வரி செலுத்தலாம்.
ஒரு நபரது வரிப் பொறுப்பு அந்த ஆண்டில் செலுத்தப்பட்ட TDS (மூலத்தில் கழிக்கப்படும் வரி) ஐ விட அதிகமாக இருந்தால், அவர் மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும். இதை ஆன்லைனில் செலுத்தலாம். வருமான வரித் துறையால் (Income Tax Department) அங்கீகரிக்கப்பட்ட 28 வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் இந்த தொகையை செலுத்தலாம். இந்த வங்கிகளில், ஆக்சிஸ் வங்கி, எஹ்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய பிரபல வங்கிகள் அடங்கும்.
வரி செலுத்துதலுக்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் இதோ
- ஆக்சிஸ் வங்கி
- பந்தன் வங்கி
- பேங்க் ஆஃப் பரோடா
- பேங்க் ஆஃப் இந்தியா
- மகாராஷ்டிரா வங்கி
- கனரா வங்கி
- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
- சிட்டி யூனியன் வங்கி
- டிசிபி வங்கி
- பெடரல் வங்கி
-எஹ்டிஎஃப்சி வங்கி
- ஐசிஐசிஐ வங்கி
- ஐடிபிஐ வங்கி
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- இண்டஸ்இண்ட் வங்கி
- ஜம்மு & காஷ்மீர் வங்கி
- கரூர் வைஸ்யா வங்கி
- கோடக் மஹிந்திரா வங்கி
- கர்நாடக வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- பஞ்சாப் & சிந்த் வங்கி
- ஆர்பிஎல் வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- சவுத் இந்தியன் வங்கி
- யுசிஓ வங்கி
- யூனியன் வங்கி
- தனலட்சுமி வங்கி
மேலும் படிக்க | பம்பர் லாபம் காண.... 10 தலைசிறந்த முதலீட்டு திட்டங்களின் பட்டியம் இதோ
வரி ரீஃப்ண்ட் செயல்முறை
- ஒருவரது TDS மற்றும் TCS (மூலத்தில் வசூலிக்கப்படும் வரி) செலுத்துதல்கள் அவரது வரிப் பொறுப்பை விட அதிகமாக இருந்தால், வருமான வரித் துறை அதிகமாக உள்ள தொகையை திரும்பக் கொடுக்கும். இது இன்கம் டேக்ஸ் ரீஃபண்ட் எனப்படும்.
- இந்த ரீஃபண்ட் பொதுவாக சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் செயல்படுத்தப்பட்டு, வரி செலுத்தியவரின் இ-போர்ட்டல் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- வருமான வரிக் கணக்குகளின் செயலாக்கம் பொதுவாக ஈ-வெரிஃபிகேஷன் செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 முதல் 45 நாட்களுக்குள் நடக்கும் என்று வரி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- ஆஃப்லைன் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு (ITR-V படிவம்), இந்த செயல்முறை நிறைவடைய அதிக நேரம் ஆகலாம்.
- வருமானத்தை செயலாக்க வரித் துறை எடுக்கும் நேரம் பரவலாக மாறுபடலாம்.
- சில தாக்கல்கள் அதே நாள் அல்லது ஒரு மாதத்திற்குள் ப்ராசஸ் செய்யப்படலாம்.
- சிலவற்றை ப்ராசஸ் செய்ய 6 மாதங்கள் முதல் 1 வருட காலம் கூட ஆகலாம்.
- இது வருமான வரிதுறையின் விருப்புரிமை மற்றும் செயல்திறனைப் பொறுத்து.
ஐடிஆர் செயலாக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும்?
ஐடிஆர் செயலாக்கப்பட்ட பிறகு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 143(1) இன் கீழ் வரி செலுத்துவோருக்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்படும். ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு எந்த அறிவிப்பும் வராது. நிதி ஆண்டு 2023-24 (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) -க்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கு, வரி செலுத்துவோர் இந்த அறிவிப்பை டிசம்பர் 31, 2024க்குள் எதிர்பார்க்கலாம்.
ஐடிஆர் செயலாக்கப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
- ஒருவரது ITR சரியான நேரத்தில் செயல்படுத்தப்படவில்லை என்றால், வருமான வரி போர்ட்டலில் உள்ள "Grievance" டேப் மூலம் புகார் அளிக்கலாம்.
- அல்லது, மத்திய செயலாக்க மையம் (Central Processing Centre) அதாவது CPC ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்... குஷியில் பிஎஃப் உறுப்பினர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ