ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?
ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
ITR Filing Last Date: நாட்டில் வருடாந்திர வரி சீசன் வந்துவிட்டது. வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வரி செலுத்துவோர் செய்து வருகின்றனர். வரி செலுத்தும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான செயல்முறை, இதற்கு தேவையான ஆவணங்கள் என அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மேலும், ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்வதற்கான காலக்கெடுவையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம்.
இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
ITR Filing Last Date: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?
நிதி ஆண்டு 23-24 (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) -க்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் (Income Tax Return) செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2024, அதாவது இம்மாத இறுதியாகும்.
ITR Filing: காலக்கெடுவை தவறவிட்டால் என்ன ஆகும்?
ஜூலை 31 காலக்கெடுவிற்குள் வரி கணக்கை தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர், FY 23-24/AY24-25க்கான தாமதமான வருமான கணக்கை (Belated ITR) டிசம்பர் 31, 2024 வரை தாக்கல் செய்யலாம்.
Income Tax Return: காலக்கெடுவை தவறவிட்டால் என்ன தண்டனை?
இந்த ஆண்டு இறுதி வரை தாமதமான ITR ஐ தாக்கல் செய்ய நீங்கள் அனுமதிக்கப்பட்டாலும், தாமதமாக தாக்கல் செய்வதற்கு ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவது நல்லது.
ஐடிஆர் தாக்கல் செய்வதை நீங்கள் எவ்வளவு தாமதப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக, வருமான வரியைக் குறைப்பதற்கான சில விலக்குகளை இழக்க நேரிடலாம். இது தவிர இவர்கள் வருமான வரித் துறையின் (Income Tax Department) கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
யாரெல்லாம் கட்டாயம் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்?
- விலக்குகளுக்கு முன் உங்களின் அனைத்து வருமானம்/சம்பளங்களின் கூட்டுத்தொகை அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், நீங்கள் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
- நீங்கள் வருமான வரி (Income Tax) செலுத்துபவராகவும், இந்தியாவில் வசிப்பவராகவும் இருந்து, இந்தியாவுக்கு வெளியே ஏதேனும் சொத்து வைத்திருந்தால் அல்லது இந்தியாவுக்கு வெளியே ஏதேனும் சொத்தின் மூலம் ஆதாயம் பெற்றால், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
- இது தவிர, இந்தியாவுக்கு வெளியே பராமரிக்கப்படும் கணக்கு, அசையும் அல்லது அசையா சொத்து ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவராக (சிக்னடரி) நீங்கள் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் ITR ஐ நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
- நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகள், பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் அல்லது உங்களிடம் பணியாளர் பங்கு விருப்பங்கள் (ESOPS) இருந்தால், உங்கள் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
- கடந்த ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தியிருந்தால், உங்கள் பெயரில் மின் இணைப்பு இல்லாவிட்டாலும், ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
- நீங்கள் உங்களுக்காகவோ அல்லது வேறு நபருக்காகவோ ரூ. 2 லட்சத்துக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்திற்குச் செலவு செய்திருந்தால், ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் (Savings Account) உங்கள் பெயரில் உள்ள வங்கி வைப்புத்தொகை ரூ. 50 லட்சத்துக்கு மேல் இருந்தால் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
- உங்கள் வணிகத்தின் அனைத்து விற்பனைகளின் மதிப்பு ரூ. 60 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், உங்கள் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் நீங்கள் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ