Highest GST Collection : ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை, 1.74 லட்சம் கோடி ரூபாயாகும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதை விட 7.7 சதவீதம் அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டைவிட கணிசமாக அதிகரித்துள்ளது
வீட்டு உபயோக பொருட்கள் மீதான வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று (2024 ஜூலை 1, திங்கட்கிழமை) தெரிவித்தது. இதுவரை 28 சதவீத வரி செலுத்தி வந்த கதவுகள், மேஜைகள் மெத்தைகள் என வீட்டு உபயோக பொருட்களுகு இனிமேல் ஜிஎஸ்டி வரி 18 சதமாக இருக்கும்.
ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாகவும் நிதியமைச்சகம் நேற்று தரவுகளை வெளியிட்டது
ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் சிஜிஎஸ்டி ரூ 39,586 கோடி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ரூ 33,548 கோடி.
ஜிஎஸ்டியின் மொத்த வசூலில் மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மற்றும் இறக்குமதி & ஏற்றுமதி மீதான வரிகளும் அடங்கும். அதே நேரத்தில், ஜிஎஸ்டியின் கீழ் அரசாங்கம் செஸ் மூலம் பணத்தையும் வசூலிக்கிறது.
தொற்றுநோய்க்குப் பிறகு முதல்முறையாக, ஜிஎஸ்டியின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கங்களுக்குக் கீழே சரிந்துள்ளது
ஜிஎஸ்டியில் சுமார் 17 உள்ளூர் வரிகள் மற்றும் செஸ்கள் சேர்க்கப்பட்டு ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்டது
மே மாதத்தில், நாட்டில் ஜிஎஸ்டி வசூல் 10% அதிகரித்து ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. இதன் மூலம், நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்த வசூல் ரூ.5.57 லட்சம் கோடியாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை